டிரம்ப் - புதின் போனில் பேச்சு.. 90 நிமிடங்கள் நடந்த ஆலோசனை.. ஈரான் போர் முடிவுக்கு வருமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். 90 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஈரான் போர் விவகாரம், உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இரு தலைவர்களும் உரையாடுவது இதுவே முதல் முறையாகும். மத்திய கிழக்கில் நிலவும் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை உதவியாளர் உரி யுஷ்கோவ் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது யுஷ்கோவ் கூறியதாவது:-

பாரசீக வளைகுடா மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை குறித்து சிறப்பு கவனம் செலுத்தி பேசியதாக அவர் கூறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தை டிரம்ப் நீட்டித்தது சரியான முடிவு என்றும் புதின் கூறியதாகவும், இது பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இருக்கும் என எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு விவகாரங்களை தாண்டி, ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பாகவும் புதினும், டிரம்பும் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது. முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைசச்ர் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு ஈரானை எச்சரிக்கும் விதமாக, இனிமேலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள மாட்டேன்..
அணு திட்டம் தொடர்பான தீர்வு விரைவில் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று தனது சமூக வலைத்தளத்தில் ஈரானை எச்சரிக்கும் விதமாக பதிவிட்டு இருந்தார். கையில் துப்பாக்கியை வைத்தபடி போர்களத்தில் நிற்பது போன்ற புகைப்படத்தையும் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்தித்த நிலையில், டிரம்புடன் புதின் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications