எலான் மஸ்க் - விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு.. டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை அந்த நாட்டின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். கடந்த 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது.

donald trump elon musk vivek ramaswamy

இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் தனது தலைமையிலான அரசின் நிர்வாக ரீதியாக புதியவர்களை நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது. எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அதேபோல் விவேக் ராமசாமியும் தொழிலதிபராக இருந்து குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற கடுமையாக உழைத்தனர். எலான் மஸ்க் நிதியுதவி செய்தார். விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார். இந்நிலையில் தான் அவர்கள் 2 பேருக்கும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+