ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது உள்பட ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மேலும் ஈரானுக்குள் படைகளை அனுப்புவது தொடர்பாக டிரம்ப் கையில் பிளான் உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கியது. இந்த போர் 3வது வாரமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஈரானின் கேஸ் வயலை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதற்கு பதிலடியாக ஈரானும், கத்தாரின் கேஸ் வயலை குறிவைத்து 'அட்டாக்' செய்துள்ளது.

iran war donald trump us

இதனால் இப்போதைக்கு போர் முடியுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையை பாதிக்கும் வகையில் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் போடும் பிளான்

இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவது உள்பட ஈரான் மீது தரை வழியாக தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது அமெரிக்காவின் இன்னொரு பிளான் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கூடுதல் வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

அதன்படி மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதில், மத்திய கிழக்கில் கூடுதலாக பல ஆயிரம் வீரர்களை அனுப்புவது பற்றி அமெரிக்கா யோசிக்கிறது. இதனை வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ஈரானுக்குள் இறங்கும் ராணுவம்?

இந்த கூடுதல் படைகள் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளைக்கு முக்கிய கடல் வழித்தடமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்பட பல்வேறு ராணுவ பணிகளை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ஈரான் மீதான போரில் விமானப்படை மற்றும் கடற்படை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும். வரும் நாட்களில் ஈரானின் கடற்கரையோரம் ராணுவத்தை களமிறக்கும் வகையில் இந்த திட்டத்தை டிரம்ப் முன்னெடுக்கலாம்.

இதுதவிர இன்னும் சவாலான திட்டங்கள் அமெரிக்கா வசம் பரிசீலனையில் உள்ளது. ஈரானின் 90 சதவீதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என்று அமெரிக்கா படையை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

நீண்டகால போராக மாறலாம்

அந்த வகையில் அமெரிக்கா சார்பில் ஈரானுக்கு இப்போதைக்கு தரைப்படை (ராணுவம்) அனுப்பும் முடிவு இல்லை. ஆனால் ராணுவத்தை அனுப்புவது உள்பட அனைத்து விஷயங்களையும் டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார். இதனால் ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் இறங்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் போர் இன்னும் மோசமாகும். அதோடு நீண்டகால போராக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+