புதினுக்கு ஃபோன் போட்ட டிரம்ப்? கையில் 3 மேஜர் பிளான்.. முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ‛‛நான் அமெரிக்க அதிபர் ஆனால் அடுத்த 24 மணிநேரத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன்’’ என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வென்றுள்ள நிலையில் இன்று டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவும், அமெரிக்காவும் எதிரெதிர் துருவமாக உள்ள நிலையில் டிரம்பின் இந்த பேச்சு என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவதற்கு வைத்துள்ள 3 முக்கிய பிளான்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் 2025 ஜனவரி 20ம் தேதி முதல் அமெரிக்க அதிபராக செயல்பட உள்ளார். டொனால்ட் டிரம்ப் புதிய அதிபராகும் நிலையில் உலகளவில் பெரிய அளவில் மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

donald trump vladimir putin ukraine russia war

குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் போர் என்பது முடிவுக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போரை பொறுத்தமட்டில் தற்போதைய ஜோ பைடன் அரசு ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவை சமாளிக்கும் வகையில் உக்ரைனுக்கு, தொடர்ந்து அமெரிக்கா உதவி செய்து வருகின்றன. பொருளாதாரம் மற்றும் ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில் தான் டொனால்ட் டிரம்ப், ‛‛நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்படாமல் தடுத்து இருப்பேன். ஜோ பைடன் அரசின் தவறான செயலால் தான் இந்த போர் வெடித்துள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரானால் அடுத்த 24 மணிநேரத்தில் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன்’’ என்று கூறினார். டொனால்ட் டிரம்பின் இந்த கருத்து என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

மொத்தம் 3 ஐடியா: ஏனென்றால் ரஷ்யாவும், அமெரிக்காவும் வல்லரசு நாடுகளாகும். இருநாடுகளுக்கு இடையேயும் இந்த போர் விஷயத்தில் கடும் மோதல் போக்கு உள்ளது. ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறிமாறி வசைப்பாடி வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதேபோல் ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு உதவி அதிபர் விளாடிமிர் புதினின் கோபத்தை சம்பாதித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க டொனால்ட் டிரம்ப் எப்படி 24 மணிநேரத்தில் போரை நிறுத்துவார்? என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது கையில் முக்கியமான 3 ஐடியாக்களை வைத்துள்ளார்.

முதல் ஐடியா: அதில் முதல் விஷயம் என்னவென்றால் ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே Buffer Zone உருவாக்குவது. பொதுவாக பபர் ஜோன் என்பது மோதல் அல்லது போர் நடக்கும் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் அமைதியை உருவாக்கும் பகுதியாகும். அதாவது ரஷ்யா - உக்ரைன் இடையே 800 Mile Buffer Zone அமைத்து ஐரோப்பிய படை வீரர்களை நிலைநிறுத்த டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இருநாடு படை வீரர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

2வது ஐடியா: ரஷ்யா - உக்ரைன் போருக்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் அது நேட்டோ அமைப்பு தான். நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பாகும். 2ம் உலக போருக்கு பிறகு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து படைகளை திரும்ப பெற மறுத்தது. இதை முறியடிக்கும் வகையில் நட்பு நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் இந்த நேட்டோ படைகள். இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, ஐஸ்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், நார்வே, போர்ச்சுகல், டென்மார்க் உள்பட 30 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இணைவதன் மூலம் அந்த நாடுகள் இக்கட்டான சூழலில் நேட்டோ ராணுவ உதவிகளை பெற முடியும். தொடர்ச்சியாக இந்த அமைப்பில் புதிய நாடுகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரஷ்யாவும், உக்ரைனும் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனுக்கு நீண்டகாலமாக எல்லை பிரச்சனை உள்ளது. சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்து வைத்திருந்தது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாக்க அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டினார். நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அமெரிக்கா உள்பட நேட்டோவில் உள்ள நாடுகளின் படை வீரர்கள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவார்கள். இது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இதனால் தான் கோபமடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போரை தொடங்கினார்.

இந்நிலையில் தான் நேட்டோ படையில் உக்ரைனை இணைக்க வேண்டாம். உக்ரைனும் நேட்டோவில் இணைவதை தவிர்க்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் கூறலாம். 2 ஆண்டுகளாக ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் பெரும் பாதிப்பை சந்தித்து வருவது மற்றும் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஜோன் உருவாக்குவது உள்ளிட்டவற்றால் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடலாம் . இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மனதை குளிர வைத்து போரை கைவிட வைக்கலாம் என்று டிரம்ப் நம்புகிறார்.

3வது ஐடியா: தற்போது ஜோ பைடன் அரசு நேரடியாக உக்ரைனுக்கு உதவி செய்கிறது. இது தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொந்தளிக்க செய்துள்ளது. இதனை மாற்ற டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படிப்படியாக உக்ரைனுக்கு உதவி செய்வதை அமெரிக்கா குறைக்கும். அதேவேளையில் ரஷ்யாவையும் போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறுவார். இதன் முதற்கட்ட பணியை தான் தற்போது டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ளார்.

ஏற்கனவே டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதேபோல் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியிருந்தார். அதேபோல் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை பற்றி இன்னும் இருதரப்பும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஜோ பைடன், புதினும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில் டொனால்ட் டிரம்ப் தற்போது பேசியிருப்பது போர் நிறுத்ததத்திற்கான நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா - ரஷ்யா இடையே மோதல் போக்கு இருந்தாலும் கூட டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் இடையே நல்ல உறவு உள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்குமான உறவு என்பது பிரதமர் மோடி - விளாடிமிர் புதின் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஜோ பைடன் - புதின் அளவை விட சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் தான் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியை இழந்த போதும் கூட சிலமுறை அவரும், புதினும் நேரடியாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்குமான இந்த உறவு மூலம் நிச்சயம் புதினை சமாதானப்படுத்தி ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார். டொனால்ட் டிரம்பின் இந்த 3 திட்டங்கள் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமா? எதிர்க்காலத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பதை அறிய நாம் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். இருப்பினும் கூட இருநாடுகள் இடையேயான போர் விவகாரத்தில் டொனால்ட் டிரம்பின் செயல்பாடு தற்போது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+