அமெரிக்க ராணுவத்திற்கு டிரம்ப் போட்ட திடீர் உத்தரவு! நெருங்கும் சீனா- ரஷ்யா.. கவனிக்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவும் சீனாவும் நெருங்கி வரும் சூழலில், இது சர்வதேச அரசியலில் கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதற்கிடையே ரஷ்யா மற்றும் சீனாவைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். புவிசார் அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருமச் சூழலில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

உலக அரசியலில் இப்போது பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை உலக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் டிரம்ப் நடவடிக்கைகள், நட்பு நாடுகளையும் கூட அமெரிக்காவிடம் இருந்து விலக்கி வைக்கிறது. இன்னொரு பக்கம் அமெரிக்காவுக்கு எதிராகப் பல உலக நாடுகள் ஒரே புள்ளியில் இணைந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கான அழுத்தத்தை அதிகரித்தே உள்ளது.

Donald Trump Orders Pentagon Overhaul for Military Readiness to Counter Closer Russia-China Ties

டிரம்ப் போட்ட உத்தரவு

இதற்கிடையே ரஷ்யா மற்றும் சீனாவைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். டிரம்ப் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதை பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் உறுதி செய்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு புதிய மோதலை ஏற்படுத்துவதற்கான உத்தரவு இது இல்லை என்றும் நாம் தயாரான நிலையில் இருக்கும் முயற்சி என்று பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் கூறினார்.

அமெரிக்காவுக்கான மெசேஜ்

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யத் தலைவர் புதின் மற்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசியிருந்தனர். இது அமெரிக்காவுக்கு எதிராக அனுப்பப்பட்ட ஒரு மெசேஜ் ஆகவே இது பார்க்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் ஒரே அணியில் இணையும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

பென்டகன் சொன்ன தகவல்

இந்தச் சூழலில் தான் டிரம்ப் இதுபோல தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டிருக்கிறார். பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் இது தொடர்பாக மேலும் பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக முந்தைய நிர்வாகத்தின் (பைடன் அரசு) பலவீனமாக இருந்தது. இதனால் ரஷ்யாவும் சீனாவும் ஒரே அணியில் நெருங்கியது. அப்போது வலுவான அமெரிக்கத் தலைமை இல்லாததே இதற்குக் காரணமாகும்..

இப்போத நமக்கு வலிமையான ஒரு தலைமை கிடைத்துள்ளது. அதனால் தான் அதிபர் டிரம்ப் இப்போது பாதுகாப்புத் துறைக்கு மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தார். ராணுவத்தை மீண்டும் வலிமையாகக் கட்டியெழுப்பவும் எந்தவொரு நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.. இதனால் நாங்கள் புதிய மோதல்களை ஏற்படுத்தப் பார்க்கிறோம் என நினைக்க வேண்டாம். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இதைத் தெளிவாக விளக்கியுள்ளோம். மோதலைத் தடுக்கவே நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே இதன் அர்த்தம்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த மாற்றம்

புவிசார் அரசியலில் இப்போது மிகப் பெரிய மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் டிரம்ப் நடவடிக்கையால் அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிருப்தியில் உள்ளன. இன்னொரு பக்கம் சீனா வரிசையாகப் பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் சந்தித்துப் பேசியிருந்தனர். அதேபோல சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கும் சீனா அதிபரைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+