படிக்கும் போது அவார்டு வாங்கியவராம்.. டிரம்ப்பை சுட்ட இளைஞர் பற்றி வெளியான புதிய தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பவருமான டொனால்டு டிரம்ப் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் பெரிய அளவில் பாதிப்பு இன்றி டிரம்ப் தப்பினார். இதனிடையே டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதய அதிபர் டொனால்டு டிரம்பும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருப்பதால் அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. பென்னிசல்வேனியாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் வலது காதில் காயம் ஏற்பட்ட போதிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார். தான் நன்றாக இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், தன்னை விரைந்து காப்பாற்றிய சீக்ரெட் சர்வீல் ஏஜெண்டுகளுக்கு நன்றி தெரிவித்தார். டிரம்பை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகே இருந்த ஒரு கட்டிடத்தின் மேல் இருந்து சுட்டதாகத் தெரிகிறது.
சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனே நடத்திய பதிலடி தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. அதேபோல கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு நபரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது பென்சில்வேனியாவை சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேநேரம், அவர் எதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்... இந்த நிலையில், டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் 17-வயதாக இருக்கும் போதே ஆக்ட் ப்ளூ என்ற அரசியல் குழுவிற்கு 15 டாலர் நன் கொடையாக கொடுத்து இருக்கிறார்.
குடியரசு அரசியல்வாதிகளுக்கும் இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் பணம் திரட்டும் அமைப்பாக இது இருந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெதல் பார்க் உயர் நிலை பள்ளியில் பட்டம் முடித்த தாமஸ் க்ரூக்ஸ் புதிர் கணிதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி ஸ்டார் அவார்டும் 500 டாலர் பரிசுத்தொகையும் பெற்று இருக்கிறார்..
அரசியல் ஆர்வம், படிப்பில் கெட்டியாக இருந்த க்ரூக்ஸ், டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான காரணம் என்ன? பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அமெரிக்க போலீசார் சல்லடை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது டொனால்டு டிரம்ப் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications