துப்பாக்கியுடன் இளைஞர்! எச்சரித்தும் கோட்டைவிட்ட சீக்ரெட் சர்வீஸ்.. டிரம்ப் மீதான தாக்குதல்.. பகீர்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் சீக்ரெட் சர்வீஸ் பிரிவை நிர்வாகிக்கும் கிம்பர்லி ஏ சீட்டிலிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் வைத்து டிரம்ப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே துப்பாக்கியுடன் ஒருவர் மேற்கூரையில் இருக்கிறார் என அங்கிருந்த பொதுமக்கள் சொல்லியும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு: அதாவது இந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடக்க சில நொடிகளுக்கு முன்பு கூரையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதைச் சிலர் பார்த்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள போலீசாரிடம் கூறியுள்ளனர். இருப்பினும், போலீசார் உரிய நேரத்தில் செயல்படத் தவறிவிட்டனர் என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே டிரம்ப் காதை பிடித்துக் கொண்டு சரிந்தார். அவரது தலைக்கு மிக அருகே சென்ற துப்பாக்கிக் குண்டு டிரம்பின் காதுகளை உரசிச் சென்றுள்ளது. இதையடுத்து டிரம்பை சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் சூழ்ந்த நிலையில், அவர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த 2ஆவது நிமிடம் சம்பவ இடத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். டிரம்பை பாதுகாப்பாக வெளியேற்றியதில் சீக்ரெட் சர்வீஸுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.
சீக்ரெட் சர்வீஸ்: ஆனால், அதற்கு முன்பு நடந்த சம்பவம் தான் சீக்ரெட் சர்வீஸ் மீதான மிகக் கடுமையான விமர்சனங்கள் எழக் காரணமாக இருந்தது. அதாவது துப்பாக்கியுடன் ஒருவர் மேற்கூரையில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிரெக் ஸ்மித் என்பவர் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சற்று வெளியே ஒரு கட்டிடத்தின் மேல் ஒரு மனிதன் ஊர்ந்து செல்வதைக் கண்டேன். அவர் கையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். பேரணி நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் அந்த நபர் ஊர்ந்து செல்வதை நாங்கள் கவனித்தோம். அவர் கையில் இருந்த துப்பாக்கி மிகத் தெளிவாகத் தெரிந்தது.
புரியவில்லை: இதனால் போலீசாரிடம் இது குறித்துச் சொன்னேன். துப்பாக்கியுடன் மேற்கூரையில் இருப்பதாகச் சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த நபர் இருக்கும் போது டிரம்பை தொடர்ந்து பேச ஏன் அனுமதித்தனர் என்று புரியவில்லை. மேற்கூரை சற்று சரிவாக இருந்ததாகவும் இதனால் போலீசாரால் அந்த நபரைப் பார்க்க முடிந்திருக்காது என்று நினைக்கிறேன். ஒரு 4, 5 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கேட்டன. இது சீக்ரெட் சர்வீஸின் தோல்வி என்றே சொல்லலாம்" என்றார்.
சிக்கலில் சீக்ரெட் சர்வீஸ்: ஸ்மித் மட்டுமின்றி பலரும் சீக்ரெட் சர்வீஸை கடுமையாகச் சாடியுள்ளனர். அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சீக்ரெட் சர்வீஸிடம் இருக்கும். இந்த ரகசிய சேவையின் இயக்குநராக கிம்பர்லி ஏ சீட்டில் இருக்கும் நிலையில், அவர் மீதான விமர்சனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும், இந்த பாதுகாப்பு தோல்வி குறித்து விளக்கமளிக்கவும் விசாரணைக்கு ஆஜராகவும் குடியரசு கட்சி பிரதிநிதிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications