இறந்துவிட்டார் மகிழ்ச்சியாக இருக்கு.. எஃப்பிஐ முன்னாள் இயக்குநர் மறைவுக்கு டிரம்ப் கொடுத்த ரியாக்ஷன்
வாஷிங்டன்: அமெரிக்க எஃப்.பி.ஐயின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் காலாமானார். அவரது மரணம் குறித்து தனது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கும் டிரம்ப், முல்லர் மரணம் அடைந்தது மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தனக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக முல்லர் விசாரித்ததால் அவர் மீதான வெறுப்பை உமிழ்ந்து வந்த டிரம்ப், மரணம் அடைந்த பிறகும் இப்படியான பதிவை போட்டு இருக்கிறார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பிஐ. இதன் தலைவராக இருந்தவர் ராபர்ட் முல்லர் III. அமெரிக்காவின் முதன்மையான விசாரணை அமைப்பாக இருந்த எஃப்.பிஐயை, இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவாகவும் இவரே மாற்றினார்.

நல்லது, அவர் இறந்துவிட்டார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவியதாக எழுந்த குற்றாச்சாட்டு தொடர்பாகவும் இவரே விசாரணை மேற்கொண்டார். 81 வயதான ராபர்ட் முல்லர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். நல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பாவி மக்களை இனி அவரால் காயப்படுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த கருத்து தொடர்பாக எஃப்.பி.ஐ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு
எஃப்.பி.ஐ வரலாற்றில் ஜே. எட்கர் ஹூவருக்கு அடுத்ததாக நீண்ட காலம் பதவி வகித்த இயக்குநராக இருந்த முல்லர், தனது 10 ஆண்டு கால அவகாசம் முடிந்த பின்னரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பாரக் ஒபாமாவின் வேண்டுகோளை ஏற்று 2013 வரை அந்த பதவியில் தொடர்ந்தார். தனியார் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டிரம்ப்-ரஷ்யா தொடர்பான விசாரணைக்கு சிறப்பு வழக்கறிஞராக மீண்டும் பொதுப் பணியாற்றுமாறு இவருக்கு அழைப்பு வந்தது.
அப்போதைய அமெரிக்க துணை சட்டத்துறைத் தலைவர் ராட் ரோசன்ஸ்டீன் கேட்டுக்கொண்டதையடுத்து, இந்த பொறுப்பை முல்லர் ஏற்றார். அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்கு சாதகம் ஏற்படுத்தும் விதமாக ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராபர்ட் முல்லர் விசாரணை நடத்தினார்.
448 பக்க அறிக்கை
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, டிரம்பின் தேர்தல் பிரச்சாரத் தலைவர் மற்றும் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட டிரம்புக்கு நெருக்கமான ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அவரது 448 பக்க அறிக்கையில், டிரம்ப் பிரச்சார குழுவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டாலும், குற்றச் சதி நடந்தது என்று அவர் கூறவில்லை.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்ததால் முல்லர் மீது தனது கோபத்தை தொடர்ந்து கொட்டி வந்த டிரம்ப், தனது இரண்டாவது ஆட்சி காலம் வரையிலும் தொடர்ந்தார். இந்த நிலையில், முல்லர் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் டிரம்ப் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications