காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு அனுமதியில்லை.. டிரம்பால் ஹேப்பியான இஸ்ரேல்! கோபமாகும் இஸ்லாமிய நாடுகள்
வாஷிங்டன்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி காசாவை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மீண்டும் அங்கு பாலஸ்தீனியர்கள் குடியேற அனுமதியில்லை என்று கூறி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 15 மாதங்களாக போர் நடந்து வந்தது. இதில் காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சுமார் 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

இதற்கிடையே தான் தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனிய சிறை கைதிகளை விடுவிப்பதாகவும், ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிப்பதாகவும் கூறியதன் பேரில் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். எப்போது வேண்டுமானாலும் இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம். அப்படி நடக்கும்போது இஸ்ரேல், காசாவுக்குள் புகுந்து மீண்டும் அடிக்கும். இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்குயா மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர்.
டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அவரை சந்தித்த முதல் தலைவர் என்ற பெயரை பெஞ்சமின் நெதன்யாகு பெற்றார். இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நெருக்கமான நட்பு என்பது உள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் இந்த சந்திப்பு என்பது இஸ்ரேலுக்கு அதிக ஆதரவு வழங்குவதை காட்டுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது டொனால்ட் டிரம்ப்,‛‛காசா முனையில் நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன மக்கள் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் மீண்டும் அதே காசாவில் வசிக்க சொல்வது சரியல்ல. 100 ஆண்டாக நடக்கும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள். மீண்டும் வாழ்க்கையை துவங்குவார்கள். பிறகு பரிதாபமாக இறப்பார்கள்.
இதனால் காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.போர் பூமியில் குவிந்து கிடக்கும் குண்டுகள், வெடிமருந்துகள் உட்பட எல்லாவிதமான ஆயுதங்களையும் அப்புறப்படுத்துவோம். கட்டட கழிவுகளை அகற்றி காசாவை சமப்படுத்துவோம். வீட்டு வசதிகள் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் கனிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும். காசாவில் இருந்து மக்கள் முற்றிலும் வெளியேறிய பிறகு எங்கள் வேலையை நாங்கள் தொடங்குவோம். பின்னர் காசா ஒரு சர்வதேச நகரமாக விளங்கும். பாலஸ்தீனியர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும். மத்திய கிழக்கின் அற்புதமான இடமாக காசா முனை மாறி விடும்’’ என்றார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்றார். இதற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காசாவை அமெரிக்கா கைப்பற்றக்கூடாது. காசா என்பது பாலஸ்தீனத்தின் ஒரு அங்கம். அங்கிருந்து மக்களை வெளியேற்றவே கூடாது என்று இஸ்லாமிய நாடுகள் கூறியுள்ளன. இந்த எதிர்ப்புக்கு நடுவே தான் டொனால்ட் டிரம்ப் இப்போது கூறியுள்ள தகவல் என்பது மொத்த இஸ்லாமிய நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுபற்றி ஃபாக்ஸ் நியூசுக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில் காசா குறித்த பல்வேறு கேள்விகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார். இநு்த பேட்டியில், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றிய பிறகு அங்கு பாலஸ்தீனிய மக்கள் நுழைய அனுமதி என்பது கிடையாது. காசாவுக்கு வெளியே ரீசெட்டில்மென்ட் ஏரியாக்கள் உருவாக்கப்படும். அங்கு பாலஸ்தீனியர்கள் வசிக்க தனியாக வீடு கட்டி கொடுக்கப்படும். அது அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கப்படும்’’ என்றார்.
டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த 4ம் தேதி அளித்த பேட்டியில், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். அங்குள்ள கட்டட குப்பைகளை அகற்றி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பாலஸ்தீனியர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும்’’ என்று கூறியிருந்தார். டொனால்ட் டிரம்பின் இந்த கருத்துக்கே இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப் காசாவை அமெரிக்கா கைப்பற்றிய பிறகு பாலஸ்தீனியர்கள் நுழைய அனுமதியில்லை என்று கூறியிருப்பது இஸ்லாமிய நாடுகளை டென்ஷனாக்கி உள்ளது. இதனால் காசா விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications