Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவூதியை வைத்து மெகா பிளான்.. ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைக்கும் டிரம்ப்.. முடியும் உக்ரைன் போர்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனடியாக நிறுத்த சவூதி அரேபியா முக்கிய விஷயத்தை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் தனது திட்டம் பற்றி சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் இந்த திட்டம் ஓகே ஆகும் பட்சத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.

ரஷ்யா-உக்ரைன் இடையே இருந்த எல்லை பிரச்சனை போராக மாறி உள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் சேர முடிவு செய்தது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் கேட்கவில்லை.

donald trump russia saudi arabia

இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. அடுத்த மாதம் 24ம் தேதி வந்தால் இந்த போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு பெறும். தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைனும், ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது.

அமெரிக்கா உள்பட நட்பு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். இந்நிலையில் தான் இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதேபோல் டொனால்ட் டிரம்ப் நிச்சயம் போர் நிறுத்தம் செய்வார் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் போர் நிறுத்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற (World Economic Forum) கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் காணொலி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனே முடிவுக்கு கொண்டு வர சவூதி அரேபியாவை வைத்து திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தினார். டிரம்பின் திட்டத்துக்கு சவூதி அரேபியா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதாவது உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசும்போது கூறியதாவது:

‛‛சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகள் (OPEC or Organization of the Petroleum Exportiong Countries) கச்சா எண்ணெயின் விலையை குறைக்க முன்வர வேண்டும். இதுதொடர்பாக சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தேர்தலுக்கு முன்பாக அவர்கள் எண்ணெய் விலையை குறைக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சவூதி மற்றும் ஓபெக் நாடுகள் குறைக்கும்போது அது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்'' என்றார்.

டிரம்ப் கூறிய ஓபெக் என்பது பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பு என்பது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓபெக் கூட்டமைப்பில் அவ்வப்போது நாடுகள் என்பது மாறி மாறி இடம்பெறும். 2024ம் ஆண்டின் நிலவரப்படி இந்த ஓபெக் கூட்டமைப்பில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த மொத்தம் 12 நாடுகள் உள்ளன.

அதன்படி அல்ஜிரியா, காங்கோ, கயானா, காபன், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 38 சதவீதத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. அதேபோல் கச்சா எண்ணெய் வளத்தை பொறுத்தவரை உலகில் 79.5 சதவீதம் இந்த நாடுகளிடம் தான் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஓபெக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்ததால் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் ரஷ்யா தனது கச்சா எண்ணெயை சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகளை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. இதனால் ரஷ்யாவிடம் நம்நாடு, சீனா உள்பட பல நாடுகள் கச்சா எண்ணெயை வாங்குகின்றன. இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தேவையான நிதியை வழங்குகிறது.

இந்த கச்சா எண்ணெய் மூலம் ரஷ்யா பெறும் நிதியை தடுக்கும் வகையில் தான் டொனால்ட் டிரம்ப் சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று டிரம்ப் திட்டமிட்டுள்ளார். தற்போது சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் நல்ல நட்பில் உள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

டொனால்ட் டிரம்ப் தற்போது உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதன்படி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல் புதினும், டிரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் டிரம்ப் - புதின் இடையே நல்ல நட்பு என்பது இருந்தது. அதேபோல் உக்ரைன் அதிபரும், டொனால்ட் டிரம்ப் கூறும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் முன்னிலையில் ரஷ்யா - உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் டிரம்ப் இப்படி ரஷ்யாவின் அடிமடியிலேயே கைவைக்கும் வகையில் சவூதி அரேபியா மற்றும் ஓபெக் நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+