ஆப்பிள் சிஇஓவை பாடாய்படுத்தும் அதிபர் டிரம்ப் டீம் ... டிம் குக்கிற்கு பறந்த கடிதம்.. கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கிற்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் தான் டிரம்பின் டீம் கடும் வார்னிங்குடன் டிம் குக்கிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் 'ஆப்பிள் நியூஸ்' தளமானது இடதுசாரி ஊடகங்களின் செய்திகளைத் திட்டமிட்டு ஊக்குவித்து, வலதுசாரி ஊடகங்களின் கட்டுரைகளை ஒடுக்குவதாக அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கிற்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தி செய்வதை டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. இதுபற்றி நேரடியாக டொனால்ட் டிரம்ப், டிம் குக்கை கண்டித்து இருந்தார்.

donald-trump-team-ftc-sends-warning-letter-to-apple-ceo-tim-cook-allegedly-boosting-left-wing-source

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி விவகாரத்தில் டிம் குக் மீது டொனால்ட் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தான் தற்போது அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிற்கு வார்னிங் செய்துள்ளார். எஃப்டிசி-யின் தலைவர் ஆண்ட்ரூ பெர்குசன் ஆப்பிள் தலைமை அலுவலகத்திற்கு வார்னிங் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

அதில் , ‛‛ "ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) என்பது அமெரிக்க மக்களை ஏமாற்றும் செயல்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பபு. சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வணிக ரீதியிலான விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறோம்.
ஆப்பிள்ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம். அதன் ஒரு சேவை தான் ஆப்பிள் நியூஸ். இது செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இருந்து செய்திகளை திரட்டி வழங்கி வருகிறது. அமெரிக்காவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த ஜனவரி 2026 முழுவதும் ஆப்பிள் நியூஸ் தளத்தில் இடம்பெற்ற 620 முக்கிய செய்திகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான கட்டுரைகள், செய்திகள் தி அசோசியேட்டட் பிரஸ், என்.பி.சி. நியூஸ், தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய ஊடகங்களிலிருந்து வந்தவை. இதில் பாக்ஸ் நியூஸ், நியூயார்க் போஸ்ட் போன்ற வலதுசாரி ஊடகங்கள் இடம்பெறவில்லை.

இது திட்டமிட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பல ஆய்வுகளின்படி, அண்மை மாதங்களில், ஆப்பிள் நியூஸ் அமெரிக்க கொள்கை சார்ந்த கட்டுரைகளை இடம்பெற செய்யவில்லை. ஆனால் தாராளாவத அடிப்படையிலான கட்டுரைகளை அதிகம்வெளியிட்டுள்ளது. இதுஆப்பிள் நியூஸ் அதன் சேவை விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என்பதையும், கோடிக்கணக்கான அமெரிக்கப் பயனர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா? என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

மேலும். இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதோடு அமெரிக்காவின் கொள்கைளுக்கு எதிரானதாக உள்ளது. இதனை FTC சட்டத்தின் கீழ் உங்கள் கடமையை சரியாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுத்ப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமான செய்தி, வாடிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் அது FTC சட்டத்தை மீறும் செயலாகும். இதனால் உடனடியாக இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அனுப்பி உள்ள எஃப்டிசியின் ஆண்ட்ரூ பெர்குசன், டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டார். இதனால் இதனால் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டிரம்புக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+