Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா
வாஷிங்டன்: டொனால்டு டிரம்ப் முன்வைத்த திட்டங்களை ஏற்று ஒப்பதம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே ஒரு மாதமாக பதற்றம் நிலவும் நிலையில், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையானது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ளது. இந்த போரினால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துள்ளது.

15 அம்ச திட்டம்
இந்த சூழலில், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர 15 அம்ச திட்டம் ஒன்றையும் அமெரிக்கா வகுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், ஈரான் அணுசக்தி திட்டத்தை கைவிடுதல், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்டவை அதில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் இந்த 15 அம்ச திட்டத்தை ஈரான் ஏற்க மறுத்துவிட்டது. இன்னொரு பக்கம் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை நிறுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுத்தால், அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விட அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கரோலிஏ லேவிட் கூறியுள்ளார்.
ஈரான் ஏற்கத் தவறினால்
இது தொடர்பாக செய்தியளர்களிடம் பேசிய லேவிட் கூறியதாவது:- தற்போதைய சூழலை ஈரான் தவறாக கணிக்கக் கூடாது. இப்போதைய நிலைமையின் உண்மையை ஈரான் ஏற்கத் தவறினாலும், ராணுவ ரீதியாக தோல்வியடைந்துள்ளனர் என்பதையும் ஈரான் புரிந்து கொள்ளாமல் இருந்தால், டிரம்ப் அவர்கள் இதுவரை எப்போதும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக தாக்குதல் நடைபெறுவதை உறுதி செய்வார். டிரம்ப் எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறார் என நினைக்க கூடாது. மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி கொண்டு இருக்கிறார்" என்றார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு
மேலும் அவர் கூறுகையில், ஈரானின் ராணுவ திறன்களை அமெரிக்கா தொடர்ந்து அழித்து வருகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நீர்மூழ்கி கப்பல் ஒன்றை மூன்று வாரங்களுக்கு முன்பாக தகர்த்தோம்" என்றார். ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து விவரங்களை வழங்க மறுத்த அவர், அது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் மாற்றத்திற்கு உட்பட்டதாகவே உள்ளது" என்றார்.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications