இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரான் மிரட்டல் எதுவுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணிநேரத்தில் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டின் மின்உற்பத்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்கும். முதலில் பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்று ஈரான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் சரியாக அடுத்த 48 மணிநேரத்தில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார்.

இதுதெடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத்' வலைதள பக்கத்தில், '' மிரட்டல் எதுவுமின்றி ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இதனை செய்யவிட்டால் சரியாக அடுத்த 48 மணிநேரத்தில் அமெரிக்கா, ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கும். குறிப்பாக பெரிய மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து இந்த தாக்குதல் தொடங்கப்படும். உங்களின் கவனத்துக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில் டொனால்ட் டிரம்ப், ''அமெரிக்கா, ஈரானை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிந்துவிட்டது. ஆனாலும் அவர்களின் திறமையற்ற ஆய்வாளர் டேவிட் சாங்கர், நான் எனது இலக்குகளை அடையவில்லை என்று கூறுகிறார். உண்மையில் நான் என் இலக்குகளை அடைந்துவிட்டேன். அதுவும் திட்டமிட்ட காலத்தை விட பல வாரங்களுக்கு முன்பாகவே இலக்கை எட்டிவிட்டேன்.
அவர்களின் தலைமை அழிந்துவிட்டது. கடற்படையும், விமானப்படையும் செயலிழந்விட்டது. அவர்களிடம் எந்தவித பாதுகாப்பும் இல்லை. இப்போது அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நான் அதனை விரும்பவில்லை'' என கூறியுள்ளார்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ்












Click it and Unblock the Notifications