'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாக போனால், ஓமன் நாட்டையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் தனது நட்பு நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஓமனுக்கே டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓமனை கடுமையாக எச்சரித்த டிரம்ப்
ஓமன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த நாடு தகர்க்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதிக்க முடியாது. அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். இது சர்வதேச கடல் பகுதி. ஓமன் மற்ற நாடுகளைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அதை நாங்கள் அழித்து விட வேண்டிய நிலை ஏற்படும். அதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். எல்லாம் சுமூகமாக இருக்கும்" என்று கூறினார். ஈரான் என்று கூறுவதற்கு பதிலாக ஓமன் என தவறுதலாக டிரம்ப் குறிப்பிட்டாரா? அல்லது.. ஒமனை குறிப்பிட்டே சொன்னாரா? என்பது பற்றி வெள்ளை மாளிகை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஓமன் உள்ளது.
ஓமன் மீது ஈரான் தாக்கிய நிலையில், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஓமனும் ஈடுபட்டு இருந்தது. இந்த சூழலில், ஓமன் நாட்டிற்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருப்பது மத்திய கிழக்கு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிய காட்சிகளை சிறிது நேரத்தில் அந்நாட்டு வெளியுறவு துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.
வீடியோவில் குறிப்பிட்டது என்ன?
அந்த வீடியோவிலும் எந்த திருத்தமும் செய்யாமல் ஓமன் என்று குறிப்பிட்டதே ஒளிபரப்பானது. எனவே, டிரம்ப் திட்டமிட்டே ஓமனை எச்சரித்தது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் வெடித்தது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த ஈரான், அந்த வழியாக போக்குவரத்தை முடக்கியது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. அமெரிக்கா - ஈரான் போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், கடந்த ஏப்.9 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துக்கொண்டே செல்கிறது.
ஈரான் மீது வான்வழி தாக்குதல்
இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்கா - ஈரான் இடையேயான ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியதாக தகவல்கள் வெளியானது. எனினும், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறி நீடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழலில்தான், புதிய வான்வழித் தாக்குதலை அமெரிக்கா இன்று காலை அரங்கேற்றியது.
ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில், ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில், அமெரிக்க ராணுவம் அதிகாலையில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருபுறம் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications