Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் சிவந்த டிரம்ப்.. இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை! வரியை தாண்டி ஆக்ஷன் பாயுமாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் வரிகளை ரத்து செய்த பிறகு, உலக நாடுகள் அமெரிக்கா உடனான தங்கள் டீலை இறுதி செய்வதை ஒத்திவைத்து வருகிறது. இதற்கிடையே இதுபோல ஒத்திவைக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்தாண்டு டிரம்ப் உலக நாடுகள் மீது இஷ்டத்திற்கு வரி விதித்திருந்தார். இந்தியா, கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் என யாருமே டிரம்ப் வரிகளில் இருந்து தப்பவில்லை. இது சர்வதேச அளவில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியது. அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்வதே கடினமாக மாறியது. இதனால் சர்வதேச வணிகர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Donald Trump Warns World countries Don t Walk Away from US Trade Deals or face consequences

டிரம்ப்

உலக நாடுகள் கண்டித்த போதும் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா உடன் உலக நாடுகள் வர்த்தக டீலை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் வரியைக் குறைக்க முடியும் என்றும் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினார். இதையடுத்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தத்தை அறிவித்தது. இந்தியா உடன் கூட நீண்ட காலமாகவே பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் வர்த்தக டீல் குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதாவது அமெரிக்காவின் வரிகள் செல்லாது என்றும் டிரம்ப்பிற்கு வரிகளை அறிவிக்கும் உரிமையே இல்லை என்றும் சொல்லி அதிர்ச்சி கொடுத்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இது டிரம்ப்பிற்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு வந்த பிறகு உலக நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தன.

உலக நாடுகள்

முதலில் ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்கா உடனான வர்த்தக டீலுக்கு ஒப்புதல் தரும் மசோதாவை ஐரோப்பிய ஒன்றியம் ஒத்திவைத்துள்ளது. அடுத்து இந்தியா.. இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான டீலை இறுதி செய்ய இந்திய டீம் அமெரிக்கா செல்லவிருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்திய டீமின் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நீதிமன்றத் தீர்ப்பை ஆய்வு செய்து, முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளும் வர்த்தக டீலை இறுதி செய்வதைத் தள்ளி வைத்துள்ளன. இப்படி உலக நாடுகள் தொடர்ச்சியாக அமெரிக்கா டீலில் இறுதி முடிவை எடுப்பதைத் தள்ளி வைத்து வருகிறது. இது டிரம்ப்பை கொந்தளிக்க வைத்துள்ளது.

எச்சரிக்கை

இதற்கிடையே உலக நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து பின்வாங்க வேண்டாம் என அவர் எச்சரித்தார். இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் எந்த நாடும் விளையாடக்கூடாது என்றும் விளையாட முயன்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் பக்கத்தில், "பல ஆண்டுகளாக அதிக வரி விதித்து அமெரிக்காவை ஏமாற்றி வந்த நாடுகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அதை வைத்து விளையாட நினைக்கிறது. இதுபோல கேம் ஆட முயல்வோருக்கு மிக அதிக வரி விதிக்கப்படும். இது ஒப்புக்கொண்டதை விட மிக அதிகமாக இருக்கும். மேலும், அதைவிடப் பல மோசமான விளைவுகளையும் சந்திக்க நேரிடும். ஜாக்கிரதை!" எனக் கடுமையாக எச்சரித்தார்.

லைசென்ஸ் முறை

இது தொடர்பாக டிரம்ப் வரிசையாகப் பல எச்சரிக்கை பதிவுகளைப் போட்டார். அதில் தனது வரி அழுத்தத்தைத் தக்கவைக்கப் பிற வர்த்தகச் சட்டங்களைப் பயன்படுத்தப் போவதாக ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) கீழ் விதித்த வரிகள் ரத்தான போதும், மற்ற வழிகளைப் பயன்படுத்தி நிச்சயம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எல்லாவற்றையும் விட மேலாக அமெரிக்காவுடன் வர்த்தக டீல் போடாத நாடுகளுக்கு லைசென்ஸ் முறையைக் கொண்டு வந்து அதற்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப் போகும் ஐடியாவையும் அறிவித்தார். இது முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு நேர் எதிரான ஒரு கொள்கையாகும். ப்ரீ டிரேட் என்பதே அமெரிக்காவின் அடிப்படை! அப்படி இருக்கும்போது டிரம்ப் லைசென்ஸ் முறை எனச் சொல்லியுள்ளது பதற்றத்தையே ஏற்படுத்துகிறது. இதுவரை வெள்ளை மாளிகை இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்

மேலும், அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 20ம் தேதி 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 கீழ் 10% தற்காலிக இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்தார். அடுத்த நாளே அது 15% ஆக உயர்த்தப்பட்டது. இந்த 15% வரி இன்று செவ்வாய்க்கிழமை அமலுக்கு வருகிறது. இது 150 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+