'சிறந்த தலைவர்' பிரதமர் மோடி... டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் நேற்று எழுச்சியுடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மோடியின் 70 வயதை குறிக்கும் வகையில் 70 அடி கேக், லட்டு என பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தமிழகத்திலும் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பாஜகவினர் எழுச்சியுடன் கொண்டாடினர். மோடியின் பிறந்த நாளுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சிறந்த தலைவரும் நெருங்கிய நண்பருமான மோடிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார் டிரம்ப்.












Click it and Unblock the Notifications