இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி குறித்து அமெரிக்க அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் சொன்ன சூப்பர் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கோவிட்டுக்கு எதிரான 'மிக முக்கியமான மாற்று மருந்து' என அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்தார். 617 உருமாறிய கொரோனா வைரஸ்களை இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி அழிப்பதாக கூறியுள்ளார்.

கொரோனாவின் 2வது அலையில், உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு நாடுகளில் உருமாற்றம் (மரபணு மாற்றம்) அடைந்து வெவ்வேறு வடிவங்களில் பரவி மனித உயிர்களை கொன்று வருகின்றன.

உருமாறிய கொரோனா மகாராஷ்டிரா,. டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா தகவல்

அமெரிக்கா தகவல்

இந்நிலையில் கொரோனா வைரஸின் முதல் அலையின் போது கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி, உருமாறிய கொரோனாவை அழிக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த கேள்விக்கு, இந்தியாவில் தயாராகும் கோவேக்சின் தடுப்பூசி, உருமாறிய கொரோனாவை அழிக்கும் வல்லமை கொண்டது என்ற தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க் டைம்ஸ்

SARS-CoV-2 கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கோவாக்சின் பாடம் கற்பிக்கிறது என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறியது. இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் கோவேக்சினை உருவாக்கியது, கோவாக்சின் ஜனவரி 3 ஆம் தேதி அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சோதனை முடிவுகளின் படி தடுப்பூசி 78 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது.

இந்திய தடுப்பூசி

இந்திய தடுப்பூசி

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்சின், இந்திய வகை கொரோனா வைரஸை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரும், அமெரிக்காவின் உயர்மட்ட தொற்றுநோய் நிபுணருமான டாக்டர் அந்தோனி பாசி வாஷிங்டனில் தெரிவித்தார்.

617 உருமாறிய வைரஸ்

617 உருமாறிய வைரஸ்

கொரோனா பரவ வேகமாக அதிகரித்து வருகிறது இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியால் குணமடைந்த நோயாளிகள் மற்றும் அந்த தடுப்பூசி பெற்றவர்களின் தரவுகளை ஆய்வு செய்தோம். இதில், கோவாக்சின் தடுப்பூசி 617 உருமாறிய வைரஸ்களை அழித்தது கண்டறியப்பட்டது. எனவே, இந்தியாவில் தற்போது நாம் காணும் உண்மையான நிலை, கடும் சிரமமாக இருந்தபோதிலும், தடுப்பூசி போடுவதே தீர்வாக இருக்கும்" என பாசி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+