பேரழிவு தொடங்கிடுச்சு.. 2050ல் மொத்தமாக அழிய போகும் உலகம்? இந்த தப்புக்கும் நாம் தான் காரணமாம்!
வாஷிங்டன்: இப்போதெல்லாம் புதிது புதிதாக நாம் கனவில் கூட எதிர்பார்க்காத நோய்ப் பாதிப்புகள் திடீரென பரவி வருகிறது. இதுபோல ஏற்படும் நோய்ப் பாதிப்புகள் உலகையே மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது. இதற்கிடையே இன்னும் 25 ஆண்டுகளில், அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் சுமார் 4 கோடி பேர் சூப்பர்பக்ஸ் காரணமாக உயிரிழப்பார்கள் என்ற ஷாக் தகவல் தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நம்மை எந்தளவுக்குப் படாய் படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். சும்மா பக்கத்து வீதிக்குச் சென்றாலே மாஸ்க் போட வேண்டிய சூழலே இருந்தது.

4 கோடி உயிரிழப்புகள்: அதில் இருந்து நாம் இப்போது தான் மெல்ல மீண்டு வந்துள்ளது. இதற்கிடையே 2050ம் ஆண்டுகள் சுமார் 4 கோடி பேர் சூப்பர்பக்ஸ் காரணமாக உயிரிழப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மிகப் பெரிய இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சரி இந்த சூப்பர்பக்ஸ் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா.. ஆன்டிபயாடிக்ஸ் போட்டும் பலன் தராத பாக்டீரியா அல்லது நோய்க்கிருமிகளைத் தான் இங்கே சூப்பர்பக்ஸ் என்று அழைக்கிறோம். இவை ஆன்டிபயாடிக்ஸ் போட்டாலும் உயிரிழக்காது என்பதால் இதற்குச் சிகிச்சை அளிப்பது கடினமான விஷயம். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே இப்போதே பார்க்கப்படுகிறது.
சூப்பர் பக்ஸ்: இது எப்போதோ நடக்கப் போகும் பாதிப்பு எல்லாம் இல்லை. ஏற்கனவே இந்த சூப்பர்பக்ஸ் காரணமாகப் பேரழிவு தொடங்கிவிட்டது. கடந்த 1990 முதல் 2021 வரை மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சூப்பர்பக்ஸால் உயிரிழந்துள்ளனர். ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ் என்று அழைக்கப்படும் சூப்பர்பக்ஸ்களுக்கு சிகிச்சை தருவது ரொம்பவே கடினமான பணியாகும்.
இதற்கு முன்பு வரை கடந்த 30 ஆண்டுகள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சூப்பர்பக்ஸ்களால் பாதிக்கப்படுவது குறைவாகவே இருந்தது. தொற்று நோய்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக் காரணம். அதேநேரம் இப்போது குழந்தைகளிடையேயும் இது அதிகரித்துள்ளதாம். இதனால் சிகிச்சை அளிப்பது கடினமானதாக மாறியுள்ளது.
யாருக்குப் பாதிப்பு அதிகம்: வயதான மக்கள் எளிதாகத் தொற்று நோயால் பாதிக்கப்படுவதால்.. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் சூப்பர்பக்ஸால் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக MRSA எனப்படும் ஆன்ட்பயாடிக்கிற்கு பலன் தராத பாக்டீரியாக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது கடந்த 30 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உயிரிழப்புகள் 67 சதவீதம் அதிகரிக்கும். இதனால் 2050ம் ஆண்டில் இந்த சூப்பர்பக்ஸ் காரணமாக ஏற்படும் நேரடி உயிரிழப்புகள் 40 லட்சத்தை எட்டும் என்றும் இது மொத்தம் 1.69 கோடி உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது மிக பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் 2050க்குள் 9.2 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 22 நோய்க்கிருமிகள், 84 மருந்துகள், 11 தொற்று நோய்களை வைத்து ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தப்பை பண்ணதீங்க: சூப்பர்பக்ஸ் எனப்படும் ஆன்டிபயாடிக்ஸுக்கு பயன் தராத பாக்டீரியாக்கள் உருவாவது ஒரு இயற்கையான விஷயம். ஆனால், இப்போது நாம் ஆன்டிபயாடிக்ஸ்களை அதிகம் பயன்படுத்துவதால், சூப்பர்பக்ஸ்கள் உருவாவது அதிகரித்துவிட்டதாம். தேவையில்லாமல் ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிப்பதே இதற்குத் தான். இது முக்கிய பிரச்சினை என்பதை நாம் உணராமல் விட்டால் பேரழிவு நிச்சயம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, தப்பித் தவறியும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக்ஸ்களை எடுத்துக்காதீங்க.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications