14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.. மர்மத்தை உடைத்த நாசா.. மேட்டர் இதுதான்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: விண்வெளியில் 14 கோடி மைல் தூரத்திற்கு அப்பால் இருந்து லேசர் சிக்னல் மூலம் தரவுகள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. இது எப்படி சாத்தியம் ஆனது என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த பூமி சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். சூரிய குடும்பத்தில் உயிர்கள் வாழும் தன்மையுடன் வேறு கிரகங்கள் எதுவும் உள்ளதா என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பூமியின் துணைக்கோளான சந்திரன் தொடங்கி செவ்வாய் கிரகம் வரை இந்த ஆராய்ச்சி நீள்கிறது.

Earth receives mysterious signal 140 Million Miles Away from deep space NASA reveal

விண்வெளி ஆராய்ச்சி: அதேபோல் கற்பனைக்கும் எட்டாத இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கோள்களில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்... அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இந்த ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கிறது. நாசா விஞ்ஞானிகள் ஜேம்ஸ்வெப் என்ற சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லேசர் சிக்னல்: இந்த நிலையில், பூமிக்கு 14 கோடி மைல் தூரத்தில் இருந்து ஒரு லேசர் சிக்னல் வந்துள்ளது. இத்தனை கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்களா? என ஒரு நிமிடம் நாம் திகைப்படையலாம்.. ஆனால், உண்மையில் இது நாசா அனுப்பிய ஒரு விண்கலத்தில் இருந்துதான் வந்து இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்...

ரேடியோ அலைவரிசை மூலம்: 'சைக்கி' என்ற விண்கலத்தை கடந்த 2023 -ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய நாசா அதனை, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலை நிறுத்தியுள்ளது. விண்வெளியில் இருந்து ரேடியோ அலைவரிசை மூலமாக சிக்னல்கள் பெறப்படும் நிலையில், லேசர் தகவல் பரிமாற்றத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சைக்கி விண்கலம்: இந்த முயற்சி வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளியில் இருந்து பூமிக்கு நேரடியாக தகவல்களை அனுப்ப முடியுமாம். இந்த விண்கலத்தில் ‛டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேசன்ஸ்(டிஎஸ்ஓசி)‛ அமைப்பு பொருத்தப்பட்டு உள்ளது. தொலைதூரத்தில் இருக்கும் சிறுகோள் குறித்து ஆய்வு செய்ய நாசா சைக்கி விண்கலத்தை அனுப்பியுள்ள நிலையில், அதில் உள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் மூலம் லேசர் மூலமாக சிக்னல் பெறப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் தரவுகள்: இந்த விண்கலத்தில் இருந்துதான் முதல் முறையாக லேசர் மெசேஜ் பெறப்பட்டு இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவை விட 1.5 மடங்கு கூடுதல் தொலைவில் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் நீண்ட தொலைவிற்கு லேசர் தகவல் தொடர்புகளை சாத்தியமாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நாசாவின் JPL-திட்டத்தின் செயல்பாட்டு தலைவரான மீரா ஸ்ரீனிவாசன் இது குறித்து கூறுகையில், விண்கலத்தில் இருந்து டூப்ளிகேட் தரவுகள் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி 10 நிமிடங்கள் அளவுக்கு பெறப்பட்டது. இந்த டூப்ளிகேட் தரவுகள் லேசர் தொலைத்தொடர்பு மூலம் பெறப்பட்டது. எனினும் ஒரிஜனல் தரவுகள் ரேடியோ அலைவரிசை கமியூனிகேஷன் மூலம் பெறப்பட்டது.

25 Mbps வேகத்திற்கு தகவல்கள்: லேசர் மூலம் தகவல் பெறுவது திறம்பட உள்ளதா? என்பதை மதிப்பிடவே இது நடத்தப்பட்டது. சிறந்ததாக இல்லை என்றால், வழக்கமான முறை பின்பற்றப்படும்" என்றார். ரேடியோ சிக்னல்களை ஒப்பிடும் போது சுமார் 100 மடங்கு வேகமாக லேசர் மூலம் தகவல் தொடர்பு இருக்கும்.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்தால் இனி லேசர் மூலமாகவே தகவல் தொடர்பை விஞ்ஞானிகளால் பெற முடியும். லேசர் மெசேஜ் மூலம் 25 Mbps வேகத்திற்கு தகவல்களை பெற முடிந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் அதிநவீன கருவிகளையும் கூட விண்வெளிக்கு அனுப்பி நம்மால் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+