நினைத்தாலே போதும் ட்வீட்கள் விழும்! "மூளையில் சிப்" வைத்து சாதித்த எலான் மஸ்க்! இது எப்படி சாத்தியம்
வாஷிங்டன்: எலான் மஸ்கின் நியூரோலிங் மூலம் மூளையில் சிப் வைக்கப்பட்ட ஒருவர் வெறும் நினைத்ததன் மூலமே ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக அவரது மின்சார கார் வாகனமான டெஸ்லா, ராக்கெட் அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் உலகளவில் புகழ் பெற்றவை. அதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கி இருந்தார்.

இதற்கிடையே எலான் மஸ்கின் மற்றொரு முக்கிய நிறுவனமான நியூராலிங்க் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பு இந்த நியூராலிங்க் என்றால் என்ன.. இந்த நிறுவனம் என்ன செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நியூரோலிங்க்: எலான் மஸ்க் கைவசம் வைத்திருக்கும் பல நிறுவனங்களில் இந்த நியூரோலிங்க் நிறுவனமும் ஒன்று. மனிதர்கள் மூளையில் சிப் பொருத்தி சோதனை செய்வதே இதன் நோக்கம். முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுச் செயல்பட முடியாமல் இருப்போரின் மூளையில் சிப் வைப்பார்கள்.
அவர்கள் நினைப்பதன் மூலமாகவே விரும்பிய செயல்களைச் செய்வதே இதன் நோக்கமாகும். அவர்கள் நினைப்பதன் மூலமாகவே மின்விளக்கை ஆன் செய்யவோ அல்லது அணைக்கவோ கூட முடியும். அதாவது மனித மூளையே கம்பியூட்டர் உடன் இணைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நியூராலிங்க்கில் முதல் நோயாளி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நோலண்ட் அர்பாக். இவருக்குச் சமீபத்தில் தான் ஆப்ரேஷன் செய்யப்பட்டு மூளையில் சிப் வைக்கப்பட்டது. இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக இருந்த நிலையில், அதன் பிறகு நினைப்பதன் மூலமாகவே இவரால் பல செயல்களைச் செய்ய முடிகிறதாம். இவர் கலக்கலாக செஸ் ஆடும் வீடியோவும் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி இருந்தது.
முதல் ட்வீட்: இதற்கிடையே இவர் வெறுமன நினைப்பதன் மூலம் இவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளார். 29 வயதான அர்பாக். நியூரோலிங்க சைபர்நெட்டிக் அமைப்பின் மூலம் தனது எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி ட்வீட் செய்து இருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் ஒரு ஏஐ போட் என நினைத்து ட்விட்டர் என்னைத் தடைசெய்தனர், ஆனால், நான் மனிதன் தான் என்பதால் எலான் மஸ்க் இந்த தளத்தில் என்னை மீண்டும் அனுமதித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. இதற்குப் பலரும் பதில் அளித்த நிலையில், எலான் மஸ்க்கும் கூட இதற்கு ரியாக்ட் செய்துள்ளார். "நியூராலிங்க் டெலிபதி சாதனத்தைப் பயன்படுத்தி நினைத்ததாலே மட்டுமே பதிவிடப்பட்ட முதல் ட்வீட்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யார் இவர்: 29 வயதான அர்பாக், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டைவிங் செய்து போது விபத்தில் சிக்கினார். அதில் அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரால் மொத்தமாகச் செயல்பட முடியாமல் போனது. பல கட்ட சோதனைக்குப் பிறகு சமீபத்தில் தான் அவருக்கு மூளையில் சிப் பொருத்தும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்த அர்பாக், இருப்பினும் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது வரை நியூரோலிங்க் சோதனைகள் திருப்திகரமான முடிவுகளையே கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவன ஆய்வாளர்கள், வரும் காலத்தில் மேலும் பலருக்கு இதுபோன்ற சிகிச்சையை அளிக்கவும் முடிவு செய்துள்ளனர். இது சிக்கலான நரம்பியல் நிலைமைகளைச் சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications