போலிகணக்கு பஞ்சாயத்து! வேற மாதிரி ஆயிரும் பாத்துக்கங்க! ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டரை கைப்பற்றும் முடிவில் உள்ள எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக ட்விட்டர் ப்ளு, ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள், கருத்துரிமை, எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்தனர்.

ட்விட்டர் விவகாரம்

ட்விட்டர் விவகாரம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ட்விட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு செல்லாது என எலான் மஸ்க் கூறியிருந்தார். ட்விட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதை கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

ட்விட்டரில் போலி கணக்குகள்

ட்விட்டரில் போலி கணக்குகள்

இதற்கு ஆப்போது விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான பராக் அகர்வால், மொத்த ட்விட்டர் பயன்பாட்டாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் மிகவும் கோபமான எலான் மஸ்க், அவரை அவமானம் செய்யும் வகையில் ஒரு எமோஜியை ட்விட்டரில் பதிவு செய்தார். முன்னதாக ட்விட்டரை வாங்கலாம எனக் கேட்டபோதே பராக் அகர்வாலுக்கு, எலான் மஸ்க்குக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் எச்சரிக்கை

எலான் மஸ்க் எச்சரிக்கை

இந்நிலையில் போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் சார்பில் எழுதப்பட்டுள்ள கடித்தத்தில், "இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ட்விட்டர் தனது கடமைகளுக்கு இணங்க வெளிப்படையாக மறுக்கிறது. இது போலிக் கணக்குகள் பற்றிய தரவின் மூலம் மஸ்க்கின் சொந்த பகுப்பாய்வு எதைக் கண்டறியும் என்ற கவலையின் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தரவை நிறுத்தி வைக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என கூறப்பட்டுள்ளது.

பலத்த விவாதம்

பலத்த விவாதம்

மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஒப்பந்தம் மற்றும் கடமைகளை மீறுவது போல் இருப்பதாகவும், இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எலான் மஸ்க்கிடம் இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக முன்னரே சொன்னது போல ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவாரா அல்லது அந்த முடிவினை கைவிடுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+