ஒரே நேரத்தில் பல சிறுமிகளுடன் செக்ஸ் பார்ட்டி.. பெரும் சிக்கலில் பிரிட்டன் மன்னரின் சகோதரர்.. பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணை குறித்த வெளியான ரகசிய ஆவணங்களில் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் குறித்த தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் முக்கிய கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டில் கைதானார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டதால் சர்ச்சையானது.

இருப்பினும், பிரைவசி காரணமாக அந்த பெயர்கள் பொதுவெளிக்கு வராமல் இருந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அந்த ரகசிய ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பகீர் கிளப்புவதாக உள்ளது.
ரகசிய ஆவணங்கள்: இந்த ரகசிய ஆவணங்களில் பல முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நடிகர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அப்படி இந்த சீக்ரெட் ஆவணங்களில் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியாகி இருந்தது. இதன் காரணமாகவே இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2019இல் அரச கடமைகளில் இருந்து விலக்கி இருந்தார்.
இந்தச் சூழலில் தான் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் விதமாக இந்த நீதிமன்ற ஆவணங்களில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சொந்தமான சொகுசு தீவில் பல மைனர் சிறுமிகளுடன் நடந்த செக்ஸ் பார்ட்டியில் இளவரசர் ஆண்ட்ரூ கலந்து கொண்டதாக அந்த நீதிமன்ற ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
யார் இவர்: இந்த ஆண்ட்ரூ வேறு யாரும் இல்லை தற்போது பிரிட்டன் மன்னராக இருக்கும் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் தான். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வர்ஜீனியா கியூஃப்ரே என்பவர் தொடர்ந்த வழக்கின் நீதிமன்ற ஆவணங்களில் உள்ள தகவல்கள் தான் இவை. பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனால் கடத்தப்பட்ட பல இளம் பெண்களில் தானும் ஒருவர் என்று கூறி இவர் கடந்த 2015இல் இந்த வழக்கைத் தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் உள்ள பல முக்கிய நபர்களுடன் பாலியல் உறவு கொள்ளத் தன்னை எப்ஸ்டீன் கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் கூறியுள்ளார்.
என்ன நடந்தது: தான் டீன் ஏஜ் வயதில் இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் எப்ஸ்டீனின் சொகுசு தீவு உள்ளிட்ட இரு இடங்களில் இளவரசர் ஆன்ட்ரூ தன்னை பலாத்காரம் செய்ததாக வர்ஜீனியா கியூஃப்ரே தனது வழக்கில் கூறியுள்ளார். அதேநேரம் இந்த வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண்ணுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அந்த பெண்ணை யாரென்றே தெரியாது என்றும் இளவரசர் ஆன்ட்ரூ தொடர்ந்து கூறி வருகிறார்.
கடந்த 2019இல் இளவரசர் ஆண்ட்ரூ பிரபல சர்வதேச ஊடகமான பிபிசிக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் எப்ஸ்டீன் உடனான தனது நட்பில் தவறு எதுவும் இல்லை என்பது போல கூறியிருந்தார். சிறுமிகளைக் கடத்தி பலாத்காரம் செய்த நபருக்கு ஆதரவாக ஆண்ட்ரூ பேசியது மிகப் பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. பொதுமக்கள் பலரும் வெளிப்படையாக ஆண்ட்ரூவுக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறினர். இதையடுத்து கடந்த 2019இன் பிற்பகுதியில் ஆண்ட்ரூ அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மர்ம மரணம்: அமெரிக்காவில் இருந்த பெரும் கோடீஸ்வர்களில் ஒருவர் தான்ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டதாகப் புகார் எழுந்தன. கடந்த 2018இல் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதில் பல பிரபலங்கள் பெயர் அடிப்பட்டது. இருப்பினும், கைதான ஒரே மாதத்தில் அவர் சிறையிலேயே மர்மமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications