இந்தியாவுடன் மோதி.. பாகிஸ்தான் ஜெயிக்க முடியாது! மண்ணை கவ்வும் - சிஐஏ ஏஜென்ட் ஓபன் டாக்
வாஷிங்டன்: "இந்தியாவுடன் மோதி பாகிஸ்தானால் ஜெயிக்க முடியாது. வழக்கமான போர் நடந்ததால் அதில் இந்தியாதான் வெற்றிப்பெறும். பாகிஸ்தான் நிச்சயம் மண்ணை கவ்வும்" என்று அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் ஏஜென்ட் ஜான் கிரியாகோ தெரிவித்திருக்கிறார்.
ஜான் கிரியாகோ, 15 ஆண்டுகள் சிஐஏ அதிகாரியாகவும், பாகிஸ்தானில் சிஐஏவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் தோற்றுவிடும். இது அணு ஆயுதப் போர் பற்றியதல்ல, வழக்கமான போர் பற்றியது. இதில் பாகிஸ்தானுக்கு எந்த நன்மையும் இல்லை" என்று கூறியிருக்கிறார். கிரியாகோ, கடந்த 2002-ம் ஆண்டு பாகிஸ்தானில் பணியாற்றியபோது, பென்டகன் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வந்ததாகவும், இது இந்தியாவுக்குத் தெரியாமல் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
ஒவ்வொரு நாடும் தனது சக்தி வாய்ந்த ஆயுதங்களை அந்நாடுகளே கட்டுப்படுத்தும். இந்தியாவிடம் அணு ஆயுதம் இருக்கிறது எனில், அதை எங்கு? எப்போது? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். பாகிஸ்தானும் அப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களின் கட்டுப்பாட்டை விற்றிருக்கிறது. ஏராளமாக பணம் கொடுத்து அப்போதைய அதிபர் முஷாரஃப்பை அமெரிக்கா வாங்கியிருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய கிரியாகோ, அணுசக்தி மிரட்டல்களை சகித்துக்கொள்ளாது என்றும், எந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தீர்மானமாகப் பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
2016-ல் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு தாண்டியும், 2019-ல் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்துர் போன்ற நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்கியதை அவர் நினைவுபடுத்திய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய அணு இயற்பியலாளர் அப்துல் காதர் கான் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர்தான் அப்துல் காதர் கான். இவரை தூக்க அமெரிக்க திட்டமிட்டது. இதற்காக ஸ்கெட்சும் போடப்பட்டது. அவரை கண்காணிப்பது சிஐஏவுக்கு எளிதாக இருந்தது. எங்கு போகிறார்? எங்கு வருகிறார்? என்ன சாப்பிடுகிறார்? அவருடைய தினசரி பழக்கவழக்கங்கள் என்ன? என எல்லாவற்றையும் சிஐஏ கண்காணித்தது. ஆனால், சவுதியின் தலையீட்டால் அவரை கொலை செய்யும் முயற்சி கைவிடப்பட்டது என்றும் சிஐஏ ஏஜென்ட் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications