வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னய்யா சொல்றீங்க... கொரோனா தடுப்பூசி எவ்வளவு நாள் வேலை செய்யும்னே தெரியாதா?

Google Oneindia Tamil News

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Experts say no enough data to know how long COVID-19 vaccines provide immunity

இதைத் தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வந்தது. அதிபர் ஜோ பைடன், தான் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி ஃபௌசி கூறுகையில், 'இந்த கட்டத்தில் மாடர்னா அல்லது ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்க போதுமான தரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, எத்தனை காலத்துக்கு அது வீரியத்துடன் செயல்படும் என்பதை கணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், BioNTech நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உகுர் சாஹின் கூறுகையில், "கொரோனா தடுப்பூசியின் நோய்த்தடுப்பு திறன் ஒரு வருடம் நீடிக்கும் என நம்புகிறேன்.

ஆனால் ஜூலை 2021 வரை அதன் ஆற்றல் நீடிக்குமா என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஏனெனில் நம்மிடம் உள்ள தகவலின் படி அவர்கள் ஜூலை 2020 முதல் தடுப்பூசி பணிகளை தொடங்கியதால், 2021 ஜுலை வரை அதன் ஆற்றல் நீடிக்குமா என தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Experts say no enough data to know COVID vaccines immunity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X