என்னாச்சு இந்த டொனால்ட் டிரம்புக்கு.. கொரோனா வந்தும் அடங்கலையே.. தொடர்ந்து பொய் தகவலையே பரப்புறாரே!
வாஷிங்டன்: சாதாரண காய்ச்சலை காட்டிலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் குறைவுதான் என உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போஸ்டை பேஸ்புக் டெலிட் செய்துள்ளது.
கொரோனா குறித்த தகவல்களுக்கு எதிரானது என்பதால் இந்த போஸ்ட் டெலிட் செய்யப்பட்டது. அமெரிக்காவில் கொரோனாவால் 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை கொரோனாவால் 2.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த உயிர் கொல்லி வைரஸுக்கு உலகமே அச்சமடைந்துள்ளது.

அமெரிக்கா
இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பிலும் பலி எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் போட்டுள்ளார்கள். அதில் அவர் கூறுகையில் காய்ச்சல் காலம் அமெரிக்காவில் வரவுள்ளது. ஆண்டுதோறும் இந்த ப்ளூ காய்ச்சலால் 1 லட்சம் பேர் அமெரிக்காவில் இறக்கிறார்கள்.

கொரோனா
அந்த ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டும் மக்கள் உயிரிழக்கிறார்கள். இதற்காக நாம் நம் நாட்டில் லாக்டவுனை அறிவிக்க வேண்டுமா என்ன? தேவையில்லை, கொரோனாவுடன் வாழ கற்றுக் கொண்டது போல் ப்ளூவுடன் வாழ்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொண்டுள்ளோம்.

2 லட்சம் பேர்
இந்த ப்ளூ காய்ச்சல் கொரோனா வைரஸை காட்டிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். டிரம்ப் தெரிவித்த கருத்துகளை முற்றிலும் தவறானது என பலர் தெரிவித்துள்ளார்கள். பல ஆண்டுகளாக ப்ளூ காய்ச்சலால் 24 ஆயிரம் முதல் 62 ஆயிரம் பேர் வரை மட்டுமே அமெரிக்காவில் இறக்கிறார்கள். ஆனால் மார்ச் மாதம் முதல் கொரோனாவால் 2 லட்சம் பேர் இறந்துள்ளார்கள்.

எச்சரிக்கை
இவ்வாறிருக்கையில் எப்படி கொரோனா வைரஸ் குறைந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் என சொல்ல முடியும். இதனால் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் போஸ்ட்டை பேஸ்புக் நிறுவனம் டெலிட் செய்துள்ளது. அதே போல் ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் போஸ்ட்டை டெலிட் செய்யவில்லை, மாறாக ட்விட்டர் விதிகளுக்கு மாறானது என கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா
ஏற்கெனவே இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் குறித்து பேச இந்தியா தரப்பில் அமெரிக்காவை நாடியுள்ளதாக ஒரு தகவலை தெரிவித்தார். அந்த தகவலை இந்தியா மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அது போல் அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதத்தில் கூட டிரம்ப் ஒரு பொய்யர் என அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் விமர்சித்திருந்தார். இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பொய் கூறுபவராகவே கருதப்படுகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications