டேட்டா போதாது.. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
வாஷிங்டன்: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நிராகரித்துள்ளது.
இந்தியாவில் கோவாக்சின் அறிமுகம் செய்யப்பட்டபோது 3வது கட்ட டிரையல் குறித்த தகவலை வெளியிடாமல் இதை மக்களிடம் பயன்படுத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. ஆனால் அந்த மருந்து அறிமுகம் செய்யப்பட்டு பலருக்கும் செலுத்தப்பட்டது.
முதல்கட்ட ஆய்வு முடிவுகளில் கோவாக்சின் தடுப்பு மருந்தால் அதிக பக்க விளைவுகள் ஏற்படவில்லை, குறிப்பாக கோவிஷீல்டுடன் ஒப்பிட்டால் காய்ச்சல் தலைவலி போன்றவையும் வெகு சிலருக்குத்தான் ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.

டேட்டா எங்கே
அதேநேரம் அறிவியல்பூர்வமான டேட்டா தேவை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்திய தடுப்பூசியை சந்தேகப்படுவதா, இப்படி சந்தேகப்படுவதால்தான் மக்கள் ஊசி போடவரவில்லை என பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

அமெரிக்கா ஏற்கவில்லை
இந்த நிலையில்தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழில் கூட்டாளி ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்க மறுத்து உள்ளது. கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளை தர வேண்டும் அதன்பிறகுதான் பயோ உரிமை விண்ணப்பத்திற்கு தாக்கல் செய்ய முடியும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பெறப்படும் ஒப்புதல் முழு ஒப்புதல் என்று அழைக்கப்படுகிறது. எனவே கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

மார்ச் மாத டேட்டா
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசி சோதனையிலிருந்து ஒரு பகுதி டேட்டாவை மட்டுமே சமர்ப்பித்ததால் ஒகுஜென் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எஃப்.டி.ஏ கடந்த மாதம் கோவிட் தடுப்பூசி ஒப்புதலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்டது. இது இனி புதிய தடுப்பூசி பயன்பாடுகளுக்கு அவசர அங்கீகாரத்தை வழங்காது என்று கூறியிருந்தது.
Recommended Video

தொடர் முயற்சி
ஆனால், "கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நாங்கள் எஃப்.டி.ஏ உடன் ஆலோசித்து வருகிறோம் என்பதால், எஃப்.டி.ஏவின் சமீபத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதல், கோவாக்சினுக்கு தடையாக இருக்காது" என்று ஒகுஜன் நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது. இப்போதும் புதிய தடுப்பூசி என்பதற்காக எஃப்.டி.ஏ தள்ளுபடி செய்யவில்லை. டேட்டா போதாது என தள்ளுபடி செய்துள்ளது.

3வது கட்ட டேட்டா
இந்தியாவிலும், பாரத் பயோடெக் நிறுவனம் 3 ஆம் கட்ட தரவை வெளியிடுவதற்கான காலக்கெடுவை தாமதப்படுத்தி வருகிறது. 3 கட்ட தரவுகளை ஜூலை மாதத்தில் வெளியிட வாய்ப்புள்ளது. ஆனால் முந்தைய காலக்கெடு ஜூன் ஆகும். 3ம் கட்ட தரவு முக்கியமானது, ஏனெனில் அந்த முடிவுகளை வைத்துதான் உலக சுகாதார நிறுவனத்திடம் அவசர ஒப்புதல் பெற முடியும். WHO ஒப்புதல் கொடுத்தால் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications