சோகத்தில் முடிந்த பயணம்.. வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல்.. 5 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு
வாஷிங்டன்: அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், அழுத்த மாறுபாட்டால் வெடித்து சிதறியுள்ளது தெரியவந்துள்ளது. கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 1912 ஆம் ஆண்டு புறப்பட்ட டைட்டானிக் கப்பல் செல்லும் வழியில் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். கடலில் மூழ்கிய இந்த கப்பல் அமெரிக்காவின் நியூ ஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் கிடந்ததை 1985 ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

இதையடுத்து, இந்த கப்பலை கடல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அவ்வப்போது ஆழ்கடலுக்கு சென்று ஆய்வு செய்து வந்தனர். இந்த உடைந்த டைட்டானிக் கப்பலை சுற்றுலாப்பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்க்கும் வகையிலான வசதியை ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நிறுவனத்தின் ‛டைட்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கி கப்பல் 5 பேருடன் பயணத்தை தொடங்கியது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றி நர்கோலெட் (77) உள்பட 5 பேர் சென்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் தனது பயணத்தை தொடங்கிய 2 மணிநேரத்தில் தொடர்பை இழந்தது. அவசர காலத்தில் தப்பிப்பதற்காக 96 மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் அந்த நீர்மூழ்கி கலத்தில் இருந்தது. இதனால், முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தது.
கப்பலை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படை ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஜன் தற்போது காலியாகி உள்ளது. இதனால் உள்ளே இருக்கும் 5 உயிர்களுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நீர் மூழ்கி கப்பலின் அழுத்த அறை வெடித்து சிதறியுள்ளது. நீர் மூழ்கி கப்பலின் சேதம் அடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பலை சுற்றியுள்ள குப்பைகளுக்கு மத்தியில் ஐந்து பாகங்களாக நீர்மூழ்கி சிதைந்து கிடப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் எப்போதாவது மீட்கப்படுமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications