"என்ன ஒரு அதிசயம்.." வாயில் நுழைந்து தலை வழியாக வெளியே வந்த கம்பம்.. ஆனாலும் உயிர் பிழைத்த நபர்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் மிக மோசமாகக் காயம்பட்ட போதிலும், உயிர் பிழைத்துள்ளார். இவருக்கு நேர்ந்த கதையை நெட்டிசன்களால் நம்பவே முடியவில்லை.
பொதுவாக ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவரால் எந்தவொரு ஆபத்தில் இருந்தும் ஈஸியாக எஸ்கேப் ஆகலாம்.. அதிர்ஷ்டம் இல்லையென்றால் சுத்தி சுத்தி எல்லா பக்கமும் பிரச்சினை தான் ஒருவருக்கு வரும்.

இதற்குத் தான் ஒரு பழமொழியாகச் சொல்வார்கள்.. மரத்தின் மீது இருந்து விழுந்து பிழைத்தவர்களும் உள்ளனர்.. அதேநேரம் கால் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் இருக்கிறார்கள். இதைக் காட்டும் வகையிலான ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பாஸ்ட்புட் கடை ஒன்றில் உணவு சாப்பிட சென்ற நபர் ஒருவர் மீது கொடிக் கம்பம் ஏறியுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி அந்த நபர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். கடந்த புதன்கிழமை அங்குள்ள துல்சா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிளிண்டன் காலின்ஸ் என்ற நபர் தான் அந்த கொடிக் கம்பத்தைக் குத்தியுள்ளார். இது தொடர்பாக காலின்ஸை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
அதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான நபர் குறித்து எந்தவொரு தகவல்களையும் போலீசார் பகிரவில்லை. அந்த கம்பமானது பாதிக்கப்பட்டவரின் தலையில் அவரது தாடையின் கீழ் நுழைந்துள்ளது. அது அவரது வலது நெற்றியில் வெளியே வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த போதும், அமெரிக்கக் கொடி அந்த கம்பத்திலேயே இருந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
வெட்டிய அதிகாரிகள்: அந்த நபரை ஆம்புலன்ஸில் கூட ஏற்ற முடியவில்லையாம். இதையடுத்து அந்த கம்பத்தை வெட்டியுள்ளனர். அதன் பின்னரே அவரை ஆம்புலன்ஸிற்கு கூட அவரை ஏற்ற முடிந்துள்ளது. இந்த விபத்து மிக மோசமானதாகத் தெரிந்தாலும் கூட அந்த நபர் அதிசயமாக உயிர் பிழைத்துவிட்டார். அதேநேரம் அவர் தனது ஒரு கண் பார்வையை இழக்க நேரிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
காலின்ஸ் என்ற அந்த நபர் ஆவேசமாகக் கத்துவதும், பிறகு கொடிக் கம்பத்தை எடுத்து வந்து குத்துவதையும் அங்கிருந்த சிலர் நேரிலும் பார்த்துள்ளனர். அதன் பிறகும் கூட காலின்ஸ் தனது தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை. "அவனுக்கு எல்லாம் இன்னும் வேண்டும்" என்றே இந்தக் கொடூரத்தைச் செய்த பிறகும் காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணை: காலின்ஸ் இப்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது அடுத்தகட்ட விசாரணை நடத்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள கொலின்ஸ் அமெரிக்க பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராம். அங்குப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பாகத் தனியாகப் பழங்குடியின நீதிமன்றம் இருக்கிறது. இருப்பினும், இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்குமா இல்லை பழங்குடி இன நீதிமன்றம் விசாரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது அவர் பக்கம் இருந்தால் எந்தவொரு ஆபத்து நடந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியும் என்பதையே இது காட்டுவதாக உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications