தலைவலியால் துடித்த இளம்பெண்! மருத்துவர்கள் சிகிச்சையால் கண், முகம் வீங்கி, வாய் திறக்க முடியாத சோகம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 3 தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் போட்டுக் கொண்டதால் அவரது உடல்நிலை மோசமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபுளோரிடாவை சேர்ந்தவர் அலெக்சிஸ் லோரன்ஸ் என்ற 23 வயது பெண். இவருக்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டெட்டனஸ், நிமோக்காக்கல், மூளை காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை செப்டம்பர் 17ஆம் தேதி ஒரே நேரத்தில் செலுத்தியுள்ளது.

இவர் தடுப்பூசிகளை போட்ட 10 நிமிடங்கள் கழித்து அவரது உடல் நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவருடைய கண்கள் வீங்க ஆரம்பித்தன. பிறகு பார்வை பறிபோனது. இதனால் பதறிய அந்த பெண்ணால் எதையும் சொல்ல முடியாத அளவுக்கு வாய் திறக்க முடியவில்லை.
தோலின் நிறம் மாறியுள்ளது. பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டார். ரத்தத்திலும் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அந்த பெண்ணிடம் மருத்துவக் காப்பீடு இல்லாததால் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாற்றுச் சிகிச்சை தரப்படுகிறது.
தான் பாதிக்கப்பட்டது குறித்து அந்த பெண் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அந்த பெண் வீங்கிய கண்களுடன், கருப்பு ஊதா நிறத்தில் கழுத்து, நெற்றி பகுதிகளில் மாறிய தோலுடன், உடல் முழுவதும் சிராய்ப்புடன், முடிகள் உடைந்து காணப்படுகிறார்.
அந்த பெண் கூறுகையில், எனக்கு தடுப்பூசி போடும் போது மருத்துவமனை நிர்வாகம் எதையோ செய்துவிட்டதால்தான் என் முகம் இப்படி மாறிவிட்டது. என் கழுத்தை பாருங்கள், என் முகம், நெற்றியை பாருங்கள். நான் இப்போது பேசுவதற்கு காரணம் எனக்கு நடந்தது யாருக்கும் நடந்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்.
நான் உண்மையில் பயந்துவிட்டேன். என் உடலில் எல்லா இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவ உலகமே என் நிலையை பார்க்க வேண்டும். நான் தடுப்பூசி போட்ட மருத்துவமனை என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளது. நிறைய மருந்துகளை அவர்கள் ஏற்றினர். நான் மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம்தான் இவர் அரிதான ரத்த குறைப்பாடு நோயால் பாதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தனது உடல்நிலையை தானே சரி செய்துக் கொள்ள முயற்சித்தார். அவர் எந்த சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் திடீரென அவருக்கு தீராத தலைவலி வந்துவிட்டது. இதற்கு சிகிச்சை எடுக்க கலிபோர்னியா மருத்துவமனைக்கு சென்ற போதுதான் மருத்துவர்கள், அவர் தடுப்பூசிகளை போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
முதலில் அந்த பெண் தனது மத காரணங்களை கூறி மறுத்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் தன்னை கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கிறார்கள். அந்த மருத்துவமனை சட்டபடி அவர் இதுவரை செலுத்திக் கொள்ளாத தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால்தான் சிகிச்சையே தருவார்களாம். இந்த 3 ஊசிகளையும் அவர் குழந்தையிலிருந்தே போட்டுக் கொள்ளவில்லையாம்.
அந்த பெண் ஊசி போட்டுக் கொண்டதும் அவருடைய கண்கள் எரிந்து உடலில் அரிப்பு ஏற்படத் தொடங்கியது. அவரது கழுத்தை கீழே இறக்க முடியவில்லை. வலியால் கதறுகிறார். தலை வலிக்கு வந்த அந்த பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் தீராத வலியை கொடுத்துவிட்டது.
பொதுவாக சளி, காய்ச்சல் இருந்தாலே மருத்துவர்கள் தடுப்பூசிகளை போட மாட்டார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கு எப்படித்தான் 3 தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் போட்டார்கள் என தெரியவில்லை. மருத்துவர்கள் குழந்தைகளுக்கு போடும் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய சிறிய டோஸ்களை போடுவர். ஆனால் இவர்கள் மொத்த டோஸையும் அந்த பெண்ணுக்கு செலுத்தி விட்டார்களோ என சந்தேகம் எழுகிறது
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications