ஆபாச பட நடிகை வழக்கு: "34 குற்றச்சாட்டுக்கள்" மறுத்த டிரம்ப்..57 நிமிடங்கள் கோர்ட்டில் நடந்தது என்ன?
வாஷிங்டன்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, டொனால்டு டிரம்ப் மன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி அலுவலகத்தில் கைது செய்யபப்ட்டார். எனினும் அவருக்கு கை விலங்கு போடப்படவில்லை.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். பெரும் பணக்காரரான டிரம்ப் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். குறிப்பாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரம் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது.
கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப்
ஆனால், இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தேர்தல் பிரசார சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி வெளியிட்ட தகவலால் டிரம்புக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரத்தை ஸ்டார்மி பேசாமல் இருக்க அவருக்கு ரூ.1.07 கோடி டிரம்ப் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் தொகை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கில் காட்டப்பட்டது. அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவில் பொய்யாக வணிக செலவை காட்டுவது சட்ட விரோதம் ஆகும்.

நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்
எனவே டிரம்ப் விசாரணை நடந்து வந்த நிலையில் அண்மையில் தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியானதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கை விலங்கு போடப்படவில்லை
அதையடுத்து, தொடர்ந்து டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு வந்தனர். டொனால்டு டிரம்ப் மன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி அலுவலகத்தில் கைது செய்யபப்ட்டார். எனினும் அவருக்கு கை விலங்கு போடப்படவில்லை. தொடர்ந்து நீதிபதி முன்பாக டொனால்டு டிரம்ப் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து arraignment என்ற செயல்முறை நடைபெற்றது.

34 குற்றச்சாட்டுக்கள்
டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளைக் கூறி, அவருக்கு இருக்கும் உரிமைகளையும் நீதிபதி விளக்கினார். அப்போது டிரம்ப் தான் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை வாதிட்டார். தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் நீதிமன்ற அறையில் இருந்த டொனால்டு டிரம்ப் மிகவும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். குற்றச்சாட்டு பதிவு நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார். சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு பதிவு முறைகளுகாக இருந்தார்.

பதில் அளிக்காமல் சென்ற டிரம்ப்
நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு வீரர்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க டொனால்டு டிரம்ப் தனது காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் புளோரிடா மாகாணத்திற்கு பிரைவேட் ஜெட் விமானத்தில் புறப்பட்டு செல்ல உள்ளார். நீதிமன்றம் டொனால்டு டிரம்பிற்கு வழக்கு தொடர்பாக கருத்து கூறக்கூடாது என கட்டுப்பாட்டு எதையும் விதிக்கவில்லை. எனவே விரைவில் அறிக்கை அல்லது பத்திரிகையாளர்கள் சந்திப்பு மூலம் டிரம்ப் தனது கருத்தை தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

குவிந்த ஆதரவாளர்கள்
முன்னதாக மன்ஹட்டன் நீதிமன்ற வளாகத்திற்கு டிரம்பின் ஆதரவாளர்கள் நுற்றுக்கணக்கானோர் திரண்டனர். விசில் அடித்தபடி டிரம்பிற்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திய படி டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். டிரம்பிற்கு எதிரான தரப்பும் அவர் சிறை உடையில் இருப்பது போன்ற படங்களை பதிலுக்கு வைத்து இருந்தது.












Click it and Unblock the Notifications