பெற்றோர் கொலை! பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமியை விடுவித்த ஹமாஸ்..சூளுரைத்த பைடன்
வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி இன்று விடுவிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்த தொடங்கியது. முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதில் சுமார் 1,200 பேர் பலியாகினர். பின்னர் 250-க்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தி காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசா நகரம் நிலைகுலைந்துள்ளது. இதற்கிடையே, பிணைகைதிகளை விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஜோ பைடன் பேட்டி: இதன்படி, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் செய்தது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக 4 நாட்களுக்கு போரை நிறுத்தவும் உடன்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்து வருகிறது. அந்த வகையில், இன்று 3 வெளிநாட்டவர்கள் மற்றும் 14 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது.
ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்ட 4 வயது அமெரிக்க சிறுமி பத்திரமாக விடுவிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இந்த தகவலை தெரிவித்தார். ஜோ பைடன் கூறுகையில், " 4-வயது சிறுமி அபிகெய்ல் தற்போது விடுக்கப்பட்டு இருக்கிறார்.
பெற்றோரை இழந்த சிறுமி: இஸ்ரேலில் இருக்கிறார். போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இன்று 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது" என்றார். மேலும் அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்தார். விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களை இஸ்ரேல் வெளியிட்டதையடுத்து அவசர அவசரமாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இந்த தகவலை வெளியிட்டார். சிறுமி பயங்கர அதிர்ச்சியில் இருப்பதாகவும் ஜோ பைடன் கூறினார்.
இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தரைவழியாகவும் புகுந்த ஹமாஸ் இயக்கத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடும் நடத்தினர். கடந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 4-வயது சிறுமியின் பெற்றோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரேலில் இருக்கும் சிறுமி விரைவில் அமெரிக்கா அழைத்து வரப்படுவார் என்றும் தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications