Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காசா போர் முடிந்துவிட்டது.." அதிபர் டிரம்ப் திட்டவட்ட அறிவிப்பு! ஆனா ஒரு சிக்கல் இருக்கே

Subscribe to Oneindia Tamil

காசா: இஸ்ரேல்- காசா இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்திற்காக இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப், காசா போர் முடிவுக்கு வந்துவிட்டதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2023 அக்டோபர் மாதம் ஆரம்பித்த இஸ்ரேல் காசா போர் கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்தது. முதலில் ஹமாஸ் மீதான தாக்குதலைக் கைவிட இஸ்ரேல் மறுத்தே வந்தது. இருப்பினும், டிரம்ப் வலியுறுத்தியதால் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இதற்காக 20 அம்சத் திட்டத்தையும் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

Gaza War Ends Trump Brokers Ceasefire Announces Hostage Swap and Sharm el-Sheikh Peace Summit

டிரம்ப் இஸ்ரேல் பயணம்

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு அவர் முதன்முறையாக இஸ்ரேலுக்குச் சென்று இருக்கிறார். காசா போர் முடிந்துவிட்டதாக அப்போது அவர் தெரிவித்தார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு, எகிப்தில் நடைபெறும் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டுக்கு அவர் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசா போர் முடிந்துவிட்டது

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காசா போர் முடிந்துவிட்டது, அது அனைவருக்கும் தெரியும்" என்று குறிப்பிட்டார். காசா பகுதியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, "அது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நினைக்கிறேன்" என்று அவர் பதிலளித்தார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்தபடி பேசிய டிரம்ப், இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு கத்தார் உதவியதற்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் புகழ்ந்தார்.

சில பணயக்கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்படலாம் என்றும், காசா மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட விரைவில் ஒரு அமைதி வாரியம் அமைக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "யூதர்கள், முஸ்லிம்கள், அரபு நாடுகள் என அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இஸ்ரேலுக்குப் பிறகு எகிப்துக்குச் செல்கிறோம். அங்கே மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க உள்ளோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக உள்ளனர்" என்று டிரம்ப் மேலும் கூறினார்.

தொடரும் போர் நிறுத்தம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் இஸ்ரேல் எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை. கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுடன் தொடங்கிய இந்த மோதல் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி என பல்வேறு நாடுகளும் இதற்கு உதவியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் மீதமுள்ள அனைத்துப் பணயக் கைதிகளையும் இன்று (திங்கட்கிழமை) நண்பகலுக்குள் விடுவிக்க வேண்டும். அதேபோல இஸ்ரேலும் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் உட்பட 250 பாலஸ்தீனியக் கைதிகளை விடுவிக்கும். இருப்பினும், ஹமாஸின் மூத்த தளபதிகள் இந்தப் பட்டியலில் இல்லை. அதாவது ஹமாஸின் மூத்த தலைவர்கள் யாரையும் இஸ்ரேல் விடுவிக்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சிக்கல் இருக்கு

பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாம். இதற்காகக் கைது செய்யப்பட்ட 1,700 பாலஸ்தீனியர்களை வேறு வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. அதேநேரம் டிரம்ப்பின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தில் இன்னும் சில பாயிண்டுகளில் உடன்பாடு ஏற்படவில்லையாம். குறிப்பாகக் காசா ஆட்சி செய்யப்படுவது, இஸ்ரேல் படைகளின் பின்வாங்கல், ஹமாஸ் ஆயுதங்களைச் சரணடைவது உள்ளிட்டவை குறித்து இன்னும் உடன்பாடு எட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+