பெரிய சைஸ் காலடி தடம்.. அதுவும் திடீர்னு வருது போகுது.. திகில் கிளப்பும் அமெரிக்க பாலைவன ஆய்வுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஒரு பாலைவனத்தில் மனித காலடித் தடங்களை போன்று சில காலடி தடங்கள் இருப்பதும் மறைவதுமாக இருப்பதை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்வது பெர்முடா முக்கோணத்தில் பயணிக்கும் விமானங்களும் கப்பல்களும் காணாமல் போவது, ஆங்காங்கே மம்மிகள் கண்டுபிடிப்பு என பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள உடா எனும் பாலைவனத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. அதாவது இந்த பாலைவனத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.

 ஆராய்ச்சி

ஆராய்ச்சி

கலிபோர்னியாவை சேர்ந்த தாமஸ் அர்பன் மற்றும் டாரான் டியூக் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் அந்த உடா பாலைவனத்தில் கடந்த 26ஆம் தேதி பேய்களை போல பெரிய அளவிலான காலடி தடங்களை கண்டுபிடித்துள்ளனர். அதிலும் பார்ப்பதற்கு மனித கால்கள் போல் இருக்கின்றன. ஆனால் இவை மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றன.

 காலடி தடங்கள்

காலடி தடங்கள்

அதிலும் இந்த காலடி தடங்கள் பாலைவனத்தின் ஈரத்தன்மைக்கேற்ப மறைவதும் தெரிவதுமாக இருக்கின்றன. இதை கண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி, உடனே அவர்கள் நிலத்தின் அடிப்புறத்தை ஆய்வு செய்யும் ரேடார் கருவியை கொண்டு வந்து பாலைவனத்தில் பார்த்தனர். அப்போது அந்த காலடி தடங்களை காணவில்லை.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

பின்னர் ஆராய்ச்சியாளர்கள் சிலமணி நேரங்கள் கழித்து அந்த காலடியை கண்டனர். வெறுங்காலில் நடந்தது போல் இருக்கிறது. ஆள் அரவம் இல்லாத பாலைவனத்தில் அதிலும் சுட்டெரிக்கும் வெயிலில் மணல் திட்டுகளில் வெறுங்காலுடன் நடந்தது யார் என்ற ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

மனித கால்கள்

மனித கால்கள்

ஆனால் இவை பார்ப்பதற்கு மனித கால்கள் போல் இல்லை. அதைவிட பெரிதாக காணப்படுகின்றன. எனவே இவை பேய்களின் கால்களா, இல்லை ஐஸ் மனிதர்களின் கால்களா என்ற ஆராய்ச்சி நடைபெறுகிறது. இது போல் 88 காலடிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாகும்.

ஆழமற்ற நீர் நிலைகள்

ஆழமற்ற நீர் நிலைகள்

இந்த காலடிகளை பார்க்கும் போது ஆழமற்ற நீர் நிலைகளில் யாரோ நடந்தது போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த காலடிகள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்ற கருத்து உலா வருகிறது. இந்த காலடிகள் யாருடையது என்பது குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இது குறித்து அந்த பாலைவனத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள பழங்குடியினத்தவர்களிடமும் கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+