போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம்
தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் ஈரான் நிராகரித்துவிட்டது. மேலும் தனது தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரான் தங்களுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த சூழலில், நல்லெண்ண அடிப்படையில் 10 கப்பல்களில் எண்ணெயை தங்களுக்கு பரிசாக ஈரான் அளித்ததாக டிரம்ப் கூறி அதிர வைத்து இருக்கிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், பதற்றத்திற்கு நடுவே நல்லெண்ண அடிப்படையில் 10 படகுகளில் எண்ணெய்யை தங்கள் நாட்டிற்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

எண்ணெய் கொடுப்பதாக கூறினர்
பாகிஸ்தான் நாட்டு கொடியுடன் இந்த எண்ணெய் டேங்கர்கள் இயக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த பரிசை ஈரான் அளித்து இருப்பதாக சூசகமாக கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் கேபினட் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:-
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வெளிப்படையாக தெரியாத தொடர்புகள் நடைபெற்று வருவதை இந்த விவகாரம் காட்டுகிறது. நாங்கள் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாக 10 எண்ணெய் படகுகளை உங்களுக்கு கொடுக்கிறோம். 10 பெரிய படகுகளில் முழுவதும் எண்ணெய் கொடுக்கிறோம் என்றனர்.
10 பெரிய டேங்கர்கள்
முதல் குழுவான டேங்கர்கள் சில நாட்களுக்கு முன்பே அந்த முக்கியமான (ஹார்மூஸ்) நீர் வழியாக நகரத் தொடங்கியிருந்தன. நான் செய்திகளை பார்த்தேன். அப்போது அவர்கள் ஏதோ அசாதாரணம் நடக்கிறது என்று சொன்னார்கள். ஹார்முஸ் நீரிணையின் நடுப்பகுதியாக 10 கப்பல்கள் நேராக சென்று கொண்டிருந்தன. எண்ணெய் நிரப்பப்பட்ட 10 பெரிய டேங்கர்கள் அப்படியே சென்றுகொண்டிருந்தன. அப்போது நான், 'சரி, அவர்கள் சொன்னது உண்மைதான்' என்று நினைத்தேன்.
அந்த கப்பல்கள் பாகிஸ்தான் கொடியுடன் இருந்தது போல தோன்றியது. சரியானவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதற்கான ஆதாரமாக இது இருந்தது. மேலும், இந்த டேங்கர் நகர்வு, பின்னணியில் நடைபெற்று வரும் விரிவான பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் உச்ச தலைவராக இருக்க சொன்னாங்க
முன்னதாக டிரம்ப் அளித்த இன்னொரு பேட்டியில், அயேதுல்லா கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச தலைவராக என்னை பொறுப்பேற்க ஈரான் அழைத்தது என்றும் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் கூறி அதிர வைத்தார். டிரம்ப் கூறுகையில், "அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால் அதை சொல்வதற்கு அச்சப்படுகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த மக்களால் கொல்லப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் எங்களால் கொல்லப்படுவார்கள் என்றும் பயப்படுகிறார்கள். இதனால், ஈரான் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. அயேதுல்லா அலி கமெனி உயிரிழந்த பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராக நான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான் தலைமை முன்வைத்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்" என்றார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications