இந்தியர்களுக்கு ஆபத்து? மொத்தமாக நிறுத்தப்படும் H-1B விசா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹெச்-1பி விசா முறையை இந்தியர்களே அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அங்குச் சமீப காலங்களாக ஹெச்-1பி விசாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அதை மொத்தமாக முடக்கும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறி, டிரம்ப் ஒப்புதல் கிடைத்தால் இந்தியர்களின் அமெரிக்கக் கனவு நிறைவேறாமலேயே போகும்.
டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக மட்டுமே டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், சீக்கிரமே சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மீதும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. பல்வேறு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது.

ஹெச்-1பி
குறிப்பாக ஹெச்-1பி திட்டத்திற்கு டிரம்ப் பல்வேறு ரூல்ஸ் போட்டார். அதன் கட்டணத்தையும் கூட பல மடங்கு உயர்த்தினார். இந்தியர்களே இந்த ஹெச்-1பி விசா திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில், அது பெரிய சிக்கலாக அமைந்தது. இதற்கிடையே அமெரிக்காவில் ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. அமெரிக்க எம்பி கிரெக் ஸ்டியூப் என்பவர் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.
மொத்தமாகத் தடை
ஹெச்-1பி விசா என்பது திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர அறிமுகப்படுத்தப்பட்ட விசா முறையாகும். இருப்பினும், இப்போது சில நிறுவனங்கள் இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதாக கிரெக் குற்றம் சாட்டினார். இதற்காகவே குடியேற்றம் மற்றும் தேசியச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த EXILE Act என்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
காரணம் என்ன
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்க மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நமது நாட்டின் தேசிய நலன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஹெச்-1பி விசா திட்டத்தால் நமது தொழிலாளர்களும் இளைஞர்களும் வேலை கிடைப்பதில்லை. அமெரிக்காவில் வேலை செய்யும் உரிமையை இழக்கிறார்கள்.. வெளிநாட்டினருக்கு இத்தகைய வாய்ப்புகளைத் தந்தால் அமெரிக்கக் கனவை நாம் பாதுகாக்க முடியாது. அதனால்தான், உழைக்கும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றார்.
சிக்கல்
இருப்பினும், இந்த மசோதா இப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு டிரம்பின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இதற்குக் குறைந்தது பல மாதங்கள் ஆகிவிடும். மேலும், இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் என்றும் சொல்லிவிட முடியாது.
ட்ரம்ப் நிர்வாகம், ஹெச்-1பி போன்ற விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, சட்டப்பூர்வ குடியேற்றை கட்டுப்பட்டும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. ஹெச்-1பி துஷ்பிரயோகத்தைத் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புதிய ஹெச்-1பி விசாக்களுக்கு $100,000 கட்டணம் விதித்து கடந்தாண்டு உத்தரவிட்டார்.
இந்தியர்களே பாதிப்பு
அமெரிக்காவில் இப்போது ஹெச்-1பி விசா பெறுவோரில் சுமார் 80%க்கும் அதிகமானோர் இந்திய அல்லது சீன நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே, இந்தத் திட்டத்தைத் தடுக்கும் வகையில் கொண்டு வருவது நேரடியாக இந்தியர்களைப் பாதிக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் ஹெச்-1பி மற்றும் அதன் சார்ந்த ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிப்போரின் சமூக வலைத்தளப் பதிவுகளை ஆய்வு செய்த பிறகே விசா வழங்கும் நடைமுறையை அமெரிக்கா கொண்டு வந்தது. இதனால் இந்தியா முழுவதும் ஹெச்-1பி நேர்காணல்கள் தள்ளிவைக்கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பரில் நடக்க வேண்டிய நேர்காணல்கள் ஓராண்டுக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்தியர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications