இந்திய குழந்தைகள் நாடுகடத்தல்? இனி பெற்றோருடன் இருக்க முடியாது! டிரம்ப் அரசால் வந்த புது சிக்கல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதிகளால் அமெரிக்காவில் பல்வேறு விஷயங்கள் மாறி வருகிறது. இதற்கிடையே டிரம்ப் விசா விவகாரத்தில் கடுமைகாட்டி வரும் சூழலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் குடியேற்றத்தை தடுக்க ஏகப்பட்ட விதிகளை மாற்றினார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுன்றி சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பாகவும் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.

டிரம்ப் அறிவித்த புதிய விதிகளால் இப்போது பல ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் அமெரிக்காவில் இருந்த அவர்கள், இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யாருக்கு சிக்கல்
இவர்கள் அனைவரும் H-4 விசாவின் கீழ் மைனர்களாக அமெரிக்காவில் குடியேறியவர்கள். அதாவது இவர்கள் ஹெச்1 பி விசா வைத்திருப்போரின் பிள்ளைகள் ஆவர். ஹெச்1 பி விசா வைத்திருப்போரின் குழந்தைகள் H-4 விசாவின் கீழ் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள். 21 வயதாகும் வரை H-4 விசாவில் அவர்கள் பெற்றோர் உடன் இருப்பார்கள்.
என்ன பிரச்சினை
இதற்கு முன்பு இருந்த விதிகளின்படி 21 வயதான பிறகு, அவர்கள் வேறு விசா பெற 2 ஆண்டுகள் வரை டைம் இருக்கும். ஆனால், புதிய விதிகளின் கீழ் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படலாம். அவர்கள் வேறு எந்தவொரு விசாவுக்கும் தகுதி பெற மாட்டார்கள். இதனால் பலரும் கனடா அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு குடிபெயர்வது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். ஏனென்றால் அங்கு விசா விதிகள் இந்தளவுக்கு கடுமையாக இருக்காது என்பதால் அந்த நாடுகளுக்கு குடிபெயர்வது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஹெச் 1 பி விசா வைத்திருப்போர் குறிப்பிட்ட கண்டிஷன்களை பூர்த்தி செய்தால் அவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படும். ஆனால், நிர்வாக நடைமுறைகளால் க்ரீன் கார்டு வழங்கும் முறை தாமதமாகிறது. இது அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக ஹெச்1 பி விசா வைத்துள்ள இந்தியர்களை கடுமையாக பாதிக்கிறது. சரியான நேரத்தில் க்ரீன் கார்டு பெற முடியாதவர்களின் குழந்தைகளே இப்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
கிடப்பில் இருக்கும்
கடந்த மார்ச் 2023 நிலவரப்படி, சுமார் 1.34 லட்சம் இந்திய குழந்தைகள் தங்கள் குடும்பங்கள் கிரீன் கார்டுகளைப் பெறுவதற்கு முன்பே 21 வயதை கடந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை என்ன தான் அது வல்லரசு நாடாக கருதப்பட்டாலும் நிர்வாக நடைமுறைகள் மிக பெரியதாக இருக்கும். அதிக நேரம் எடுத்துக்கொள்ளவதாக இருக்கும். சில க்ரீன் கார்டு விண்ணப்பங்கள் 10, 12 ஆண்டுகள் வரை கூட கிடப்பில் இருந்துள்ளன.

காரணம் என்ன
அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை சிக்கல்களே இப்போது இந்தியர்கள், குறிப்பாக 21 வயதாகும் இந்தியர்களுக்கு எதிராக மாறியுள்ளது. அவர்களின் பெற்றோர்களுக்கு ஹெச்1 பி விசா இருப்பதால் அவர்கள் தாராளமாக தொடர்ந்து அமெரிக்காவில் தங்கலாம். ஆனால், இவர்களிடம் உரிய விசா இல்லாததால் பெற்றோரை விட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படலாம். இதற்கு முன்பாவது வேறு விசாவுக்கு மாறாக 2 ஆண்டுகள் டைம் இருந்து. ஆனால், இப்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது.
அமெரிக்காவின் புதிய விசா ரூல்ஸ் மற்றும் அங்குள்ள நடைமுறை சிக்கல்களுடன் டிரம்ப் தரப்பின் கெடுபிடியான நடவடிக்கைகளும் சேர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு பெரிய சிக்கலை தருகிறது.












Click it and Unblock the Notifications