வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா

அமெரிக்காவில் ஹாலோவீன் டே எனப்படும் பேய்களை விரட்டும் திருவிழா கொரோனா காலத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நம் ஊரில் பேய்களை விரட்ட மந்திரவாதிகளிடம் போவார்கள். குழந்தைகளுக்கு பேய்களைப் பற்றிய பயம் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கும். இருட்டில் தனியாக போகவே பயப்படுவார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பேய்களைப் பற்றிய பயத்தை போக்கவே ஒரு திருவிழா கொண்டாடுகின்றனர். ஹாலோவீன் திருவிழா அக்டோபர் 31ஆம் அமெரிக்காவில் கொண்டாடுவது வழக்கமானது. இந்த ஆண்டு கொரோனா பரவல் ஒருபக்கம், தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் ஹாலோவின் திருவிழாவை கொண்டாடியுள்ளனர்.

கோவில் திருவிழா நம் ஊரில் கொண்டாடுவார்கள். மேற்கத்திய நாடுகளில் பேய்களின் திருவிழா கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் அக்டோபார் 31ஆம் தேதி ஹாலோவீன் தினமாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் பேய்களைப் போலவும் ஆவிகளைப் போலவும் பயமுறுத்துவது போல ஆடை அணிந்து கொண்டு தெருக்களில் நடமாடுவார்கள்.

இங்கிலாந்து, அயர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது ஹாங்காங், டோக்கியோ, ஐக்கிய அமெரிக்கா நாடுகள் கனடாவிலும் இந்த பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகள் பேய்களைப் போல வேஷம் போட்டுக்கொண்டு வீடு வீடாக போய் சாக்லேட்கள் சேகரித்துக்கொண்டு வருவார்கள். சிலரோ குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகளை கொடுத்து அனுப்புவார்கள்.

சுவாரஸ்யமான வரலாறு

சுவாரஸ்யமான வரலாறு

ஹாலோவீன் திருவிழா பற்றிய வரலாறு பார்த்தோமானால் நம் ஊரில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை கடைபிடிப்பது போலத்தான். அகாலமாக உயிர் நீத்த புனிதத் துறவிகளின் நினைவாகவே இந்த நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் கடைபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாளில்தான் முதலில் இந்த ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் இந்நாள் அக்டோபர் 31ஆம் தேதியானது.

குளிர்கால கொண்டாட்டம்

குளிர்கால கொண்டாட்டம்

முதன்முதலில் இந்தப் பேய்களின் தினம் அயர்லாந்தில்தான் கொண்டாடப்பட்டது. அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் முதலில் இந்த கொண்டாட்டத்தை கடைபிடித்தனர். குளிர்கால தொடக்கத்தில் பேய்கள் போல வேஷம் போட்டு கொண்டாட ஆரம்பித்தனர். இந்த விழாவில் பூசணிக்காய் ரொம்ப முக்கியமானது. பூசணிக்காயில் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர். படிப்படியாக இந்த கொண்டாட்டம் நாடு முழுவதும் பரவி விட்டது.

பூசணிக்காய் மெழுகுவர்த்தி

பூசணிக்காய் மெழுகுவர்த்தி

பூச்சாண்டிகள் தினம் என்று வர்ணிக்கப்படும் இந்த நாளில், ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை வைத்து, மந்திரித்து,பேய்களை விரட்டினர். பின்னர், பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, பயங்கரமாக அலங்கரித்து, அதை வீட்டுக்கு வெளியே வைத்துப் பேய்களைத் துரத்த ஆரம்பித்தனர்.

பேய்கள் திருவிழா வரலாறு

பேய்கள் திருவிழா வரலாறு

கோடைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் போது இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த தினம் தான் அறுவடை நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் இந்த கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காலமாக இருப்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் இன்றி முடிந்து போனது ஹாலோவீன் தினம்.

வேஷம் போடும் மக்கள்

வேஷம் போடும் மக்கள்

ஐரோப்பா நாடுகளில் இந்த இந்த ஹாலோவீன் கொண்டாடும் பழக்கம் துவங்கியது. தீய ஆவிகள், துர்சக்திகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இது போல வேஷம் போட்டு இந்த ஹாலோவின் நாளை கொண்டாடுகின்றனர்.

பார்ட்டி கொண்டாட்டம்

பார்ட்டி கொண்டாட்டம்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதியன்று வித்தியாசமாகப் பேய் போலவும் வித்தியாசமான உருவங்கள் போலவும் உடையணிந்து அவர்கள் பூசணிக்காயை விதவிதமாக கட் செய்து டிசைன் செய்து வீதிகளில் சென்று நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவர்.

அறுவடை பொருட்களை பாதுகாக்க

அறுவடை பொருட்களை பாதுகாக்க

அறுவடை செய்து வைத்திருக்கும் பொருட்களை பேய்கள் அழித்து விடாமல் இருப்பதற்காக இந்த விழாவை பாரம்பரியமாக கொண்டாடுகின்றனர். அறுவடை செய்த பொருட்களை குவித்து வைத்து பக்கத்திலேயே சிறிய அளவில் நெருப்பு மூட்டி வைத்து
பேய்கள், பிசாசுகள், சூனியக்காரிகள் போல பலரும் வேடமணிந்திருப்பார்கள்.

குழந்தைகளும் கொண்டாடும் விழா

குழந்தைகளும் கொண்டாடும் விழா

இந்த நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதுபோல உடையணிந்து கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் நடக்கும் நாடுகளில் அன்றைய தினம் அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. ஹாலோவீன் நாள் அன்று மட்டும் தான் இது போல வித்தியாசமான உடையணிந்து ரோட்டில் செல்ல முடியும்.

முன்னோர்களுக்கு படையல்

முன்னோர்களுக்கு படையல்

பேய்களைத் திருப்திபடுத்தும் விழா என்பதைத் தாண்டி, இந்த விழா உற்சாகமூட்டும் ஒரு திகில் விழாவாகப் புகழ்பெற்றுவருகிறது. மறைந்தவர்களின் கல்லறைக்குச் சென்று, அவர்களுக்குப் பிடித்ததைப் படைக்கும் வழக்கமும் இந்த நாளில் உள்ளது.

ஹாலோவின் திருவிழா

ஹாலோவின் திருவிழா

இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல கொண்டாட்டங்கள் அமைதியாகவே நடந்து முடிந்து விட்டது. அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதாலும் தேர்தல் காலமாக இருந்த காரணத்திலும் ஹாலோவீன் தினம் அமைதியான முறையில் பலரும் வீட்டிற்குள்ளேயே கொண்டாடினர்.

குட்டீஸ்களும் வேடம்

குட்டீஸ்களும் வேடம்

அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் பேய் பிசாசுகள் போல மட்டுமல்லாது பேட்மேன், மனிதகுரங்கு வேடமிட்டும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வயதானவர்கள் பேய் வேடமிட்டு நடனமாடினார்கள். குழந்தைகள் பேய் பிசாசு வேஷம் போட்டு உற்சாகமாக ஹாலோவின் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

English summary
The spooky festival of Halloween is celebrated across the globe on October 31, It is a day to remember the dead, and its id mostly celebrated in parts of the United Kingdom, Hong Kong, Tokyo, the United States, and Canada.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X