HMPV வைரஸ்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா விளக்கம்
வாஷிங்டன்: HMPV வைரஸ் ஏற்கனவே அறியப்பட்ட சுவாச நோய்களை ஏற்படுத்துவதாகவும் சளி ஏற்படும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சீனாவில் hmpv என்னும் புதிய வகை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்பதால் தற்போது பரவி வரும் 'ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்' மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

அதேவேளையில், குளிர்காலத்தில் அதிகம் பரவக்கூடிய சாதாரண வகை வைரஸ்தான், லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சீனா கூறியுள்ளது. உலக சுகதார அமைப்பும் இந்த வைரஸ் பற்றிய தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தலைவலி, காய்ச்சல், இருமல், தும்மல் ஆகியவை இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். மேல் சுவாசபாதையில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமாம். மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம். இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பு அதிகம். ஒருவர் தும்மும் போது சளி திவலைகள் மூலமாக பரவக்கூடும்.
சளி திரவங்கள் இருக்கும் இடத்தில் கைகளை வைத்துவிட்டு, கையை மூக்கு, கண், வாய் பகுதிகள் பக்கம் கொண்டு சென்றால் வைரஸ் பாதிப்பு தொற்றும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஏற்கனவே அறியப்பட்ட hmpvசுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. சளி ஏற்படும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கை கழுவுவதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்" எண்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications