Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பின்லேடனை கொன்ற அமெரிக்கா டீமிற்கு தலைமை தாங்கிய பனேட்டா, ஈரான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலமைக்கு முழு காரணமும் டிரம்ப் மட்டும்தான். தற்போதுள்ள நிலமை முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று கிடையாது. சரியாக திட்டமிடாமல் செய்யாததால் தான் இவ்வளவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் அந்த நாடு உடனடியாக சரண் அடைந்துவிடும் என்று கணக்கு போட்ட அமெரிக்காவுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

Hormuz Crisis Former CIA Chief Panetta Cautions Us president Donald Trump over iran war

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டும் ஈரான்

ஈரானில் புதிய உச்ச தலைவராக அயேதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஈரானில் பல முக்கிய தலைவர்கள் சண்டையில் கொல்லப்பட்டாலும் அந்த நாடு, தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானின் உண்மையான ராணுவ பலம் என்ன என்று கணிக்க முடியாதபடி அமெரிக்க ராணுவத்துக்கு தண்ணி காட்டி வருகிறது.

உலகின் அதிநவீன போர் விமானமான எப் 35 ரக விமானத்தை ஈரான் குறிவைத்து தாக்கியுள்ளது உலக நாடுகளை திகைக்க வைத்தது. ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை அழித்துவிட்டோம் என்று டிரம்ப் சொன்ன பிறகுதான், எப் 35 விமானத்தை ஈரான் தாக்கியது. அதேபோல, இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து குண்டு மழை பெய்து வருகிறது. ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் ஏற்படுள்ளது.

எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் தான்

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டிர்ம்புக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்புக்கு சொந்த நாட்டில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் சிஐஏ முன்னாள் தலைவரான பனேட்டா, தி கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டிரம்பை சாடியுள்ளார்.

பின்லேடனை கொன்ற அமெரிக்கா டீமிற்கு தலைமை தாங்கியவருமான பனேட்டா கூறியிருப்பதாவது:- தற்போது ஏற்பட்டுள்ள நிலமைக்கு முழு காரணமும் டிரம்ப் மட்டும்தான். உலகின் வர்த்தக எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணை தற்போது செயல்பாட்டில் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

அடிப்படை திட்டமிடலில் தோல்வி

இந்த மோதலின் தொடக்கத்திலிருந்தே, ஈரான் அந்த நீர்வழியை அழுத்தமாக பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவாக எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போதுள்ள நிலமை முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று கிடையாது. நான் பங்கெடுத்த ஒவ்வொரு பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கிலும் ஈரான் பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம். அப்போது, இந்த விஷயங்கள் எல்லாம் பேசப்படும்.

இதற்காக டிரம்ப் நிர்வாகம் முன்கூட்டியே தயாராக இல்லாதது, அடிப்படை திட்டமிடலில் ஏற்பட்ட தோல்வியாகும். இந்த போர், திட்டமிட்டதற்கு முற்றிலும் மாறான விளைவுகளை உருவாக்கியுள்ளது. கமேனேயியின் வாரிசாக அவரது மகன் மொஜ்தபா கமேனி பதவி ஏற்றுள்ளார். அவர் இளம் வயதானவர், மேலும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர். பேச்சுவார்த்தைக்கு செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.

நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்யாமல்

இப்போது இளம் வயதுடைய ஒருவர் உயர் தலைவராக இருக்கிறார்; அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார். முதல் உயர் தலைவரை விட இவர் மிகவும் கடுமையானவர். டொனால்ட் டிரம்ப் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டவராகத் தோன்றுகிறார். நட்பு நாடுகளுடன் ஆலோசனை செய்யாமல் போர் தொடங்குவது தானாகவே தோல்வியை ஏற்படுத்தும் செயலாகும். தன்னால் முன்பு புறக்கணிக்கப்பட்ட அதே நாடுகளிடமே தற்போது உதவி கோர வேண்டிய நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+