மாரத்தானில் ஓடிய மாணவருக்கு மாரடைப்பு.. 14 வயது சிறுவன் நொடியில் துடிதுடித்து மரணம்.. ஷாக் சம்பவம்
வாஷிங்டன்: உடல் ஆரோக்கியமாக இருகக்க வேண்டும் என்பதற்காக மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுவன் யாரும் எதிர்பாராத வகையில் கார்டியாக் அரெஸ்டால் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு மாரடைப்பு என்பது முதியவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்பட்டது.

ஆனால், இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியிலும் கூட அடிக்கடி மாரடைப்பு ஏற்படுகிறது. நமது நாட்டிலும் கூட கொரோனாவுக்கு பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு அடிக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா: இதற்கிடையே அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்காவில் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் கடந்த வராம் நடந்ததுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவின் மிராமரில் உள்ள எவர்க்லேட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு ஓடும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து அந்த இளைஞர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை எப்படியாவது உயிருடன் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதற்காக மருத்துவர்கள் தீவிரமாக முயன்றனர். இருந்த போதிலும் சிறுவன் சிகிச்சை பலனில்லாமல் பரிபாதபமாக உயிரிழந்தார்.. ஆரோக்கியமாக இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கார்டியாக் அரெஸ்ட்: திடீரென்றும், எதிர்பாராத விதமாகவும் இதயச் செயல்பாடு நின்று போனால் சுயநினைவு இழப்பு ஏற்பட்டு மயங்கி விழுவோம். இதை கார்டியாக் அரெஸ்ட் என்று குறிப்பிடுவார்கள். இது கார்டியாக் அரெஸ்ட் அபாயகரமானது. இதற்கு சில நிமிடங்களில் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.. இல்லையென்றால் அது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக இந்த கார்டியாக் அரெஸ்ட் முதியவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். இளைஞர்கள் மத்தியில் இந்த கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றாலும் சமீப காலங்களில் இது அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கூட சமீப காலமாகவே ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பொதுமக்களுக்குக் கூட மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இணை நோய்: இது குறித்து அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ""சுமார் 25 சதவிகிதம் கார்டியாக் அரெஸ்ட் விளையாட்டு நிகழ்வுகளில் தான் ஏற்படுகிறது. பொதுவாக இணை நோய் உள்ள இளைஞர்களுக்குத் தான் இந்த கார்டியாக் அரெஸ்ட் அதிகம் ஏற்படும். ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி மற்றும் கரோனரி ஆர்டரி இருக்கும் பிரச்சினைகள் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணமாக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
ஒரேயடியாகத் தீவிர உடற்பயிற்சி செய்யாமல், உடற்பயிற்சியை நாம் மெல்ல அதிகரிக்க வேண்டும். இது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும். அதையும் தாண்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சிபிஆர் சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டால் நோயாளிகளைக் காப்பாற்றும் வாய்ப்புகள் மிக அதிகம்.












Click it and Unblock the Notifications