சவாரிகளை கேன்செல் செய்தே.. ரூ.23 லட்சம் சம்பாதித்த 70 வயது ஊபர் ஒட்டுநர்.. இந்த டிரிக் நல்லா இருக்கே
வாஷிங்டன்: நம்ம ஊரில் ஊபர், ஓலாவில் ஓட்டுநர்கள் மணிக்கணக்கில் கார் ஓட்டினாலும் காசு வருவதில்லை எனப் புலம்பும் நிலையில், இங்கே ஒருவர் அசாட்லாக அதில் 23 லட்சம் சம்பாதித்துள்ளார்.
இந்தியாவில் படித்துவிட்டு வேலை கிடைக்காத பலரும் ஊபர், ஓலாவின் தான் வாகனத்தை ஓட்டி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களால் ஓரளவுக்குச் சம்பாதிக்க முடிகிறது.

அதேநேரம் இப்போது அதிருப்தி குரலையும் பார்க்க முடிகிறது. பல மணி நேரம் வேலை செய்தாலும் குறைந்த வருமானமே வருவதாகக் கூறுகிறார்கள்.. ஆனால் இந்த நபர் மற்றவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு வேலையைச் செய்துள்ளார்.
ரூ. 23 லட்சம்: அமெரிக்காவின் நார்த் கரோலினாவைச் சேர்ந்த 70 வயதான ஊபர் டிரைவர் ஒருவர் தனக்கு வரும் சவாரிகளில் சுமார் 30 சதவீத சவாரிகளை கேன்செல் செய்தே அதன் மூலம் 28,000 டாலர், அதாவது ரூ. 23.3 லட்சம் அவர் சம்பாதித்துள்ளார். பில் என்ற அந்த டிரைவர் தனக்கு வரும் சவாரி கோரிக்கைகளில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே ஏற்பாராம். இப்படியே செய்து அவர் கடந்த 2022இல் சுமார் 1,500 சவாரிகளை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் சுமார் 23 லட்ச ரூபாயைச் சம்பாதித்துள்ளார்.
முன்பு வேறு ஒரு வேலை செய்து வந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றுள்ளார். அதன் பிறகு கூடுதல் வருமானம் ஈட்ட இந்த ஊபர் செயலியில் பகுதி நேரமாக வேலை செய்யத் தொடங்கினார். இருப்பினும், அவர் மற்றவர்களைப் போல எல்லா சவாரிகளையும் ஏற்க மாட்டாராம்.
கூடுதல் தொகை: பொதுவாக ஊபர் செயலியில் அதிக பேர் புக் செய்ய முயலும் போது surge price எனப்படும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதுபோன்ற நேரத்தில் மட்டுமே அவர் சவாரியை ஏற்பாராம். இதன் மூலம் ஒரே ரைடில் அவரால் அதிகபட்ச பணத்தைச் சம்பாதிக்க முடிகிறது. இந்த முறையை கடைப்பிடிப்பதால் அவர் வாரத்திற்கு வெறும் 30 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறாராம். நார்மலான ரேட்டில் வரும் மற்ற அனைத்து சவாரிகளையும் பில் கேன்செல் செய்துவிடுவாராம்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் பெரும்பாலான நேரம் சவாரியை கேன்செல் செய்துவிடுவேன். கூடுதல் கட்டணம் வந்தால் மட்டுமே சவாரியை ஏற்பேன். கொரோனா காலத்தில் பல டிரைவர்கள் குறைவான உடல்நிலை காரணமாக கார் ஓட்டவில்லை. அதனால் அப்போது ஒரு மணி நேரத்திற்கு 50 டாலர் வரை சம்பாதிக்க முடிந்தது. ஆனால், அதன் பிறகு ஓட்டுநர் எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு மணி நேரத்திற்கு $15 முதல் $20 வரை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது.
கேன்செல்: இதன் காரணமாகவே வருமானத்தை அதிகரிக்க நான் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பீக் ஹவரில் ஏர்போர்ட் அருகே சென்று நிற்பேன். விமானம் வந்த உடன் அனைவரும் ரைட் புக் செய்ய முயல்வார்கள். அப்போது எனக்கு குறுகிய டிரிப்பிற்கு நல்ல தொகை கிடைக்கும். அதேபோல வார இறுதி நாட்களில் இரவு 10 முதல் அதிகாலை 2.30 வரை பார்கள் அருகே நிற்பேன். அப்போதும் எனக்கு நள்ளிரவு நேரம் என்பதால் கூடுதல் தொகை கிடைக்கும்" என்றார்.
மேலும், தொலைதூர பயணங்களை இவர் எப்போதும் ஏற்க மாட்டாராம். அதில் சற்று அதிக தொகை கிடைக்கும் என்றாலும் கூட திரும்ப வரும் போது சவாரி கிடைக்காது என்பதால் காலியாக வர வேண்டும். இதனால் தொலைதூர பயணங்களை ஏற்க மாட்டாராம். அதேபோல கூடுதல் தொகை இல்லாமல் நார்மல் நேரத்தில் வரும் சவாரிகளை கேன்செல் செய்துவிடுவாரம். இதன் மூலம் அவர் ஒரே ஆண்டில் 23 லட்ச ரூபாயைச் சம்பாதித்து இருக்கிறார்.
இதுதான் எனது பிளான்: இருப்பினும், இவரது இந்த யுக்திகள் ஆபத்தில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஊபர் விதிகளின்படி 10 சதவிகிதத்திற்கும் மேல் சவாரிகளை கேன்செல் செய்தால் அந்த குறிப்பிட்ட டிரைவரின் கணக்கை முடக்கி விடுவார்கள். தனக்கு இதுபோல நடந்தது இல்லை என்றாலும் நண்பர்களுக்கு இதுபோல அகவுண்டை முடக்கியுள்ளனர் என்கிறார் பில்.
இது குறித்து பில் மேலும் கூறுகையில், "ஊபர் ஓட்டுவதில் இருந்து வரும் பணத்தில் தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற சூழல் எனக்கு இல்லை. இதனால் அவர்கள் கணக்கை முடக்கினாலும் பிரச்சினை இல்லை. அதுவரை ஊபர் சவாரிகளை கேன்செல் செய்து கொண்டே இருப்பேன். இது எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications