"அம்மா காப்பாத்துங்க.." மகளை போல பேசும் ஏஐ கருவி.. அடுத்த நொடி ரூ.8.2 கோடி அபேஸ்! ஜாக்கிரதையா இருங்க
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் இப்போது அடுத்த கட்டத்திற்குப் பாய்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனிடையே அதை வைத்து நடக்கும் மிகப் பெரிய மோசடி இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒவ்வொரு காலத்திலும் டெக் துறையில் ஒவ்வொரு விஷயம் பெரிய மாற்றத்தைச் சந்தித்து வரும். முதலில் கணினி, அடுத்து மொபைல் அடுத்து சமூக வலைத்தளங்கள் என்று வரிசையாக நாம் சொல்லலாம்.

அதன்படி பார்த்தால் இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ கருவிகள் தான் பெரிய புரட்சியை நடத்தி வருகிறது. அதிலும் சாட் ஜிபிடி வந்த பிறகு மற்ற ஏஐ கருவிகளின் வளர்ச்சியும் வேற லெவலில் இருக்கவே செய்கிறது.
ஏஐ பாய்ச்சல்: ஏஐ கருவிகளை வைத்து ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்யலாம் என்ற போதிலும், வழக்கம் போல இதை வைத்தும் மோசடி காரியங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்கே இருக்கும் பெண் ஒருவருக்கு மோசடி பேர்வழியிடம் இருந்து கால் வந்துள்ளது. அந்த பெண்ணின் மகளின் குரலை ஏஐ மூலம் குளோனிங் செய்த அந்த நபர் வினோத மோசடி ஒன்றைச் செய்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த சேர்ந்த ஜெனிபர் டெஸ்டெஃபனோ என்ற பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.. அவர் வழக்கம் போலக் காலை அட்டெண்ட் செய்து பேசியுள்ளார். எதிர்புறம் அவளுடைய 15 வயது மகள் அழும் குரல் கேட்டுள்ளது. என்ன ஆனது என்று தாய் கேட்டதற்கு, "நான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டேன்" என்று கூறி அழத் தொடங்கிவிட்டார்.
மகளின் குரல்: அப்போது ஜெனிபரின் மகள் அவர்களுடன் இல்லை. பனி சரக்கு விளையாட மற்றொரு ஊருக்குச் சென்றிருந்தார். இதனால் தனது மகள் உண்மையில் ஏதோ பிரச்சினையில் மாட்டிக் கொண்டார் என்றே ஜெனிபர் நினைத்துள்ளார். அப்போது ஒரு ஆணின் குரல் அவருக்குக் கேட்டுள்ளது. அவரது மகளைத் தலையில் கை வைத்துப் படுக்கச் சொல்லியுள்ளார். இது ஜெனிபருக்கு தெளிவாகவே கேட்டுள்ளது.
அதன் பின்னர் போனை வாங்கியை அந்த ஆசாமி, "நல்ல கேட்டுக்கோ.. நாங்க உன்னோட பொண்ண கடத்திட்டோம். நீ போலீஸ் அல்லது வேறு யாருக்கு போன் செய்தாலும் உன் மகளுக்குப் போதைப் பொருள் கொடுத்துடுவேன். அப்படியே அவளை இழுத்துக் கொண்டு போய் மெக்சிகோவில் போதைப் பொருள் ஆசாமிகளிடம் விட்டுவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார். அப்போது அவரது மகள் பின்னால், "அம்மா.. காப்பாத்துங்க.. பிளீஸ் அம்மா.. காப்பாத்துங்க" என்று கதறும் ஆடியோவும் கேட்டுள்ளது.
பல கோடி காலி: ஜெனிபருக்கு அது தனது மகளின் குரல் தான் என்று மிக நன்றாகவே தெரியும். இது குறித்து ஜெனிபர் கூறுகையில், "அது முழுக்க முழுக்க எனது மகளின் குரல் தான்.. அவளுக்கு ஒரு தொற்று இருந்தது. இதனால் அவள் அழும்போது, அவரது வாய்ஸ் ஒரு மாதிரி ஆகும்.. அதுவும் கூட அப்படியே தான் இருந்தது. இதனால், நான் ஒரு நொடிகூட சந்தேகப்படவில்லை" என்கிறார்.

மேலும், அந்த கடத்தல் ஆசாமி $1 மில்லியன் (இந்திய மதிப்பில் 8.2 கோடி) கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னதும், அதை 50,000 டாலராகக் குறைத்துள்ளார். அப்போது ஜெனிபர் தனது மகளின் தோழியின் அம்மாவை தொடர்பு கொண்டு ஹெல்ப் கேட்டுள்ளார். அவர் மிகவும் வலியுறுத்தவே போலீசாருக்கு கால் செய்துள்ளார். அப்போது தான் அவரது மகளை யாரும் கடத்தவில்லை என்றும் அவர் பாதுகாப்பாகப் பனிச்சறுக்கு செய்யும் இடத்தில் இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
எச்சரிக்கை தேவை: இது குறித்து ஜெனிபர் கூறுகையில், "எனது மகள் சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. ஆனால், பள்ளியில் அவர் தந்த பேட்டிகள் இணையத்தில் உள்ளனர். அதில் இருந்து வாய்ஸை எடுத்து அவர்கள் ஏஐ மூலம் குரலை மாற்றி ஏமாற்றியுள்ளனர். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் எனது பணத்தைத் திருடியிருப்பார்கள். இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதாலேயே விழிப்புணர்வை ஏற்படுத்த இது குறித்து கூறுகிறேன்" என்கிறார்.
-
ஐஆர்சிடிசி கேண்டீன்களில் ஏஐ கேமரா.. ரயில்களில் உணவு சாப்பிடுபவர்கள் அறிய வேண்டியவை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications