எச்சரிக்கை மக்களே.. பச்சிளம் குழந்தைகள் மூளையை தாக்கும் கொரோனா.. அதுவும் தாய் மூலம்.. பகீர் ஆய்வு
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது ஆய்வாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு கொரோனா பரவுவது குறித்த பகீர் ஆய்வு முடிவு இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019இல் பரவிய கொரோனா அதன் பிறகு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகம் அதற்கு விதிவிலக்கு இல்லை.

நமது நாட்டில் இதுவரை 3 கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு அலையும் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்தது. கொரோனா வேக்சின் உள்ளிட்ட பணிகளுக்குப் பின்னரே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
கொரோனா வைரஸ்: இதனிடையே இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஒரு பக்கம் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதற்காக அச்சப்படத் தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மறுபுறம் என்னதான் கொரோனாவுக்கு நாம் வேக்சின் கண்டுபிடித்தாலும் கூட ஒப்பீட்டளவில் அது புதிய ஒரு வைரஸ் தான். எனவே, கொரோனா ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பு குறித்து ஆய்வுகளும் தீவிரமாக நடந்தே வருகிறது.
இதனிடையே கொரோனா காரணமாகக் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவியதால், மூளை பாதிப்புடன் இந்த குழந்தைகள் பிறந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது குறித்த விரிவான ஆய்வு பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2020இல் வேக்சின் எல்லாம் கண்டறியப்படும் முன்பு, டெல்டா வேரியண்ட் உச்சத்தில் இருந்த போது, கர்ப்பமாக இருந்த இரு இளம்பெண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சிசுவுக்கு பாதிப்பு: அவர்கள் 3-6 மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது அவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அப்படி இரு பெண்களுக்குத் தான் மூளை பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிறந்த அன்றே இரு குழந்தைகளும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முறையான வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. ஒரு குழந்தை 13 மாதங்களில் உயிரிழந்த நிலையில், மற்றொன்று மருத்துவர்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளும் கொரோனா உறுதியாகவே இல்லை. இருந்த போதிலும் அவர்கள் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான கொரோனா ஆன்டிபாடிகள் இருந்தாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த கொரோனா முதலில் தாயிடம் இருந்து நஞ்சுக்கொடிக்கு (placenta) வந்துள்ளது.. அதன் பிறகு அது குழந்தைக்குப் பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
நஞ்சுக்கொடி: இரு குழந்தைகளின் தாய்களின் நஞ்சுக்கொடிகளிலும் வைரஸ் இருப்பதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 13 மாதங்களில் உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனையிலும் அக்குழந்தையின் மூளையில் வைரஸின் தடயங்களையும் நேரடி தொற்று காயங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த இரு இளம்பெண்களுக்கும் கர்ப்பமாக இருந்த போதே கொரோனா ஏற்பட்டுள்ளது. முதல் நபருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது.. அந்த பெண்ணுக்குக் கர்ப்ப காலம் முழுமையாக இருந்துள்ளது. மற்றொரு தாய்க்கு வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தது. மருத்துவர்கள் 32 வாரங்களில் குழந்தையை எடுக்க வேண்டி இருந்தது.
தீவிர ஆய்வு: இது மிகவும் அரிதான வழக்காக இருக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இருப்பினும் கர்ப்பமாக இருக்கும் போது கொரோனா பாதிப்பு இருந்தால், மருத்துவர்களிடம் வளர்ச்சி தாமதங்கள் குறித்து ஆய்வு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை, அதாவது ஏழு அல்லது எட்டு வயது வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்கள் முன்கூட்டியே வேக்சின் எடுத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். அதேநேரம் பச்சிளம் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் பாதிப்பு டெல்டா வேரியண்டால் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது அனைத்து வகையான கொரோனாவாலும் ஏற்படுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை..
ஆதாரம்: முன்னதாகவே இதுபோல நடக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். இருப்பினும், அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த இரு குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது ஆய்வாளர்கள் எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications