48 வருடத்திற்கு முன் நடந்த அதிசயம்.. டிரம்ப் உயிரை காப்பாற்றியதே ஜெகநாதர் அருள்.. இஸ்கான் நெகிழ்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதற்கிடையே டிரம்ப் உயிர் தப்பிய சம்பவத்திற்குக் ஜெகநாதரின் அருளே காரணம் என்று கூறியுள்ள இஸ்கான் துணைத் தலைவர் ராதாரமன் தாஸ், இது குறித்து நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. இதில் டிரம்பின் காதை தோட்டாக்கள் உரசிச் சென்ற நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பினர்.

இதற்கிடையே டிரம்ப் உயிர் பிழைக்க ஜெகநாதரின் அருளே காரணம் என்று கூறியுள்ள இஸ்கான் துணைத் தலைவர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ராதாரமன் தாஸ்: இது தொடர்பாகக் கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் துணைத் தலைவர் ராதாரமன் தாஸ் தனது ட்விட்டரில், "நிச்சயமாக இது தெய்வீகத் தலையீடுதான். சரியாக 48 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜெகநாதர் ரதயாத்திரை விழாவை டொனால்ட் டிரம்ப் காப்பாற்றி இருந்தார். இன்று, உலகம் மீண்டும் ஜெகநாதர் ரதயாத்திரை விழாவைக் கொண்டாடும் நிலையில், டிரம்ப்பை ஜெகநாதர் காப்பாற்றி இருக்கிறார்.
கடந்த 1976 ஜூலை மாதம் ஜெகநாதர் ரத யாத்திரைக்காக ரதத்தைக் கட்ட இஸ்கான் பக்தர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் தனது இடத்தை வழங்கி உதவினார். இன்று, உலகெங்கும் 9 நாள் ஜெகநாதர் ரதயாத்திரை விழா கொண்டாடப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். இது ஜெகநாதனின் செயல் தான்.
48 ஆண்டுகள்: அமெரிக்காவில் ஜெகநாதரின் முதல் யாத்திரை 1976ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்தது. அப்போது 30 வயதான இளம் ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியுடன் ரத யாத்திரை நடந்தது. சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்கான் அமைப்பு நியூயார்க் நகரில் முதல் ரத யாத்திரையை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டபோது, அதற்கு அங்குப் பல சவால்கள் இருந்தன.
அங்கு யாத்திரைக்கு அனுமதி கிடைத்தது அதிசயம் இல்லை. இதுவே பெரிய விஷயம்.. ஆனால், யாத்திரை நடக்கும் இடத்திற்கு அருகிலேயே ரதத்தைக் கட்ட பெரிய இடம் தேவைப்பட்டது. அது எளிதாகக் கிடைக்கவில்லை. அப்போது உதவிக்காக நாங்கள் பலரிடம் கேட்டோம். இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் யாரும் இடம் தர தயாராக இல்லை. அப்போது தான் கிருஷ்ண பக்தர்களின் நம்பிக்கையாக டொனால்ட் டிரம்ப் உருவெடுத்தார்.
டொனால்ட் டிரம்ப் உதவி: பலரும் முடியாது எனச் சொன்னதால் பக்தர்கள் விரக்தி அடைந்தனர். நம்பிக்கைகள் சிதைந்தன. அப்போது தான் பென்சில்வேனியா ரயில் யார்ட் விற்பனைக்கு வருவதாகத் தகவல் கிடைத்தது. இது யாத்திரை கட்ட சரியான இடமாக இருக்கும் எனக் கருதினர். சில நாட்களில் டொனால்ட் டிரம்ப் என்பவர் அந்த இடத்தை வாங்கியதாகத் தகவல் கிடைத்தது.
இது ஒரு பக்கம் நடக்க இஸ்கான் அமைப்பினர் வேறு சில இடங்களிலும் முயன்றனர். ஆனால், எங்கும் அவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை. பென்சில்வேனியா ரயில் யார்ட்டை டிரம்பிடம் கேட்டால் அவர் மட்டும் ஓகே சொல்லப் போகிறாரா என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், இஸ்கான் அமைப்பினர் கிருஷ்ணர் பிரசாதத்துடன் டிரம்பை கான சென்றனர்.
டிரம்ப் உதவியாளர்: அப்போது டிரம்ப்பின் உதவியாளர், "பொதுவாக இதுபோன்ற விஷயங்களுக்கு டிரம்ப் ஓகே சொல்ல மாட்டார். நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஆனால், டிரம்ப் முடியாது என்றே சொல்லப் போகிறார்" என்றே சொன்னார்கள்.
மஹாபிரபு மீது நம்பிக்கை வையுங்கள், அற்புதம் நிகழும்! மூன்று நாட்களுக்குப் பிறகு, டிரம்பின் உதவியாளர் கால் செய்து, "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் அவர் உங்கள் கடிதத்தைப் படித்தார்.. பிரசாதத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் உடனே ஓகே சொல்லிவிட்டார். உடனே வந்து அதற்கான லெட்டரை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ஆம், ரத யாத்திரை கட்டுவதற்கான இடத்தை வழங்க டிரம்ப் ஓகே சொல்லிவிட்டார்.
அற்புதம்: அதேபோல ரத யாத்திரைக்கான அனுமதி பெற்றதும் ஒரு அற்புதம் தான்.. முதலில் போலீசார் இதற்கு அனுமதி கொடுத்துவிட்டனர். இருப்பினும், அப்போது மேயராக இருந்தவர் ஐந்தாவது அவென்யூவில் பேரணிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என முடிவு செய்திருந்தார். இதனால் போலீசார் அனுமதியை மறுத்துவிட்டனர். டோசன் இறுதியாக மன்ஹாட்டனில் உள்ள போலீஸ் தலைவரை அணுகினார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் இந்த விண்ணப்பத்தைக் கவனமாகப் பரிசீலனை செய்த அவர், அனுமதி அளிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். சிரித்துக் கொண்டே அவர் அனுமதி கொடுத்தார். அதேபோல மற்ற கார்ப்பரேட் உரிமையாளர்களைப் போலவே, டிரம்பும் எங்கள் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் இல்லை என்று சொல்லவில்லை.. ஜெகநாதரின் ஆசீர்வாதமே இதற்குக் காரணம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications