வெறும் ரூ.15,000 செலவு.. அப்படியே 1.4 கோடி அள்ளிய நண்பர்கள்! சாட் ஜிபிடி வைத்து இப்படி கூட செய்யலாமா
வாஷிங்டன்: சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளைப் பார்த்து அனைவரும் அலறிக் கொண்டிருக்கும் நிலையில், அதை வைத்தே இங்கு இரண்டு பேர் கோடிக் கணக்கில் பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.
ஏஐ கருவிகள் இப்போது நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் சாட்ஜிபிடியின் வருகை ஏஐ துறைக்கு மிகப் பெரிய பூஸ்ட்டை கொடுத்துள்ளது.

அதேநேரம் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளால் வேலையிழப்பு அபாயம் இருப்பதாகப் பலரும் கூறி வருகின்றனர். வல்லுநர்கள் பலரும் கூட இது குறித்து அலர்ட் செய்து வருகின்றனர்.
சாட்ஜிபிடி: ஆனால் இங்கே இரண்டு பேர் அதே சாட் ஜிபிடியை வைத்து மிகப் பெரியளவுக்குக் கல்லா கட்டியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சால் ஐயெல்லோ மற்றும் மோனிகா பவர்ஸ் ஆகிய இரண்டு பேர். இவர்கள் சாட் ஜிபிடியை வைத்துக் கொண்டு வெறும் $185 (அதாவது ரூ 15,000) முதலீட்டில் ஒரு புதிய ஏஐ கருவியை உருவாக்கியுள்ளனர்.
இதைக் குறுகிய காலத்தில் வெற்றிகரமான தொழிலாக மாற்றிய இவர்கள், அதை வேறு ஒரு நிறுவனத்திற்கு $150,000 (அதாவது ரூ. 1.2 கோடி) விற்றுவிட்டனர்.
யார் இவர்கள்: இதில் சால் ஐயெல்லோ சுமார் 17 ஆண்டுகள் பொறியியல், ஸ்டார்ட்அப் உள்ளிட்ட பல துறைகளில் அனுபவம் கொண்டவர். அவர் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் நிறுவனரான இவரிடம் தான் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பும் இருக்கிறதாம்.
அடுத்து மோனிகா பவர்- இவர் 15 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் ஏஐ, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும், அமெரிக்காவில் க்ளாஸ்டோஜோ என்ற நிறுவனத்தை மிகப் பெரியளவில் கட்டமைக்கவும் உதவியவர் இப்போது. இந்த க்ளாஸ்டோஜோ நிறுவனம் சுமார் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. மேலும், ஹம் கேபிடல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளார்.
என்ன கருவி: இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் டைம்அடோசன் என்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இதில் தொழில்முனைவோரின் ஐடியாக்கள் பெறப்பட்டு, இதில் யாரெல்லாம் முதலீடு செய்யத் தயாராக இருப்பார்கள், போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விரிவான அறிக்கையைத் தரும். இந்த ஆய்வை பொதுவாக அனைத்து தொழில்முனைவோரும் செய்வார்கள் என்ற போதிலும் அந்த கடினமான வேலையை டைம்அடோசன் வெகு விரைவில் முடித்துவிடுகிறது.
முதலில் மோனிகாவும் ஐயெல்லோவும் சாதாரணமாகவே சாட்ஜிபிடியை பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு இந்த சாட்ஜிபிடியை கொண்டு பல்வேறு விஷயங்களைச் செய்ய முடியும் என்ற ஐடியா வந்துள்ளது. அதன் பிறகே அவர்கள் டைம் அடோசன் என்ற இந்த கருவியை உருவாக்கியுள்ளனர். தொழில்முனைவோரிடம் சில குறிப்பிட்ட கேள்விகள் கேட்கப்படுமாம்.
பயங்கர லாபம்: அவர்கள் அளிக்கும் பதிலை வைத்து அது என்ன மாதிரியான ஸ்டார்ட் அப் என்பது டைம்அடோசன் புரிந்து கொள்ளும். அதை வைத்து நமக்குத் தேவையான விரிவான டேட்டாவை கொஞ்ச நேரத்தில் இந்த டைம்அடோசன் ரெடி செய்து கொடுத்துவிடுமாம். இதற்கு அங்கே நல்ல வரவேற்பும் இருந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் குறுகிய காலத்தில் 66 ஆயிரம் டாலர், அதாவது 54 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
இந்தச் சூழலில் தான் நிறுவனத்தை அவர்கள் மற்றொருவரிடம் விற்றுள்ளனர். தங்களின் டைம்அடோசன் டூலை மிகப் பெரியளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பெரிய குழுமத்தில் அவர்கள் அதை விற்றதாகத் தெரிவித்துள்ளனர். கம்பெனியை விற்றாலும் கூட இன்னும் அவர்கள் நிறுவனத்தின் ஆலோசகராகத் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சூப்பர்: சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ கருவிகளால் வருமானம் போச்சு, வேலையிழப்பு என எல்லாம் அலறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நண்பர்கள் அசால்டாக வெறும் 15 ஆயிரம் செலவில் ஒரு கோடி அள்ளியுள்ளனர். இவர்களின் கதை தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications