நடுவானில் திடீரென உடைந்த கண்ணாடிகள்.. விமானத்திற்குள் புகுந்த ராட்சத பறவை.. திக் திக் நிமிடங்கள்
வாஷிங்டன்: ஈகுவடார் நாட்டில் விமானம் சென்று கொண்டிருந்த போது முன் பக்க ஜன்னல் கண்ணாடியில் மோதிய ராட்சத பறவை காக்பிட் அறைக்குள் நுழைந்துள்ளது. ரத்த காயங்களுடன் பறவை காக்பிட் அறைக்குள் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது டர்புலன்சில் விமானம் சிக்கி கொள்வதும் அதனால், ஏற்படும் அதிர்வுகளினால் பயணிகள் காயம் அடைவது குறித்த செய்திகளை அவ்வப்போது கேள்வி பட்டு இருப்போம். அதேபோல், விமானத்தின் மீது பறவைகள் மோதிக் கொள்வதால் விமானத்தின் என்ஜின் உள்ளிட்டவை சேதம் அடைந்ததால் அவசரமாக விமானங்கள் தரையிறங்கும் நிகழ்வுகளும் விமான பயணத்தில் எப்போதாவது நடைபெறும் நிகழ்வுகள் ஆகும்.

இதில் பெரும் அதிர்ச்சி அடைவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு ராட்சத பறவை காக்பிட்டிற்குள் நுழைந்ததாக எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா? ஆம் அத்தகைய ஒரு ஷாக் சம்பவம் தான் ஈகுவடார் நாட்டில் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன.
அதாவது, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென விமானத்தின் முன் பக்க கண்ணாடி மீது ராட்சத பறவை ஒன்று மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அந்த பறவை காக்பிட் அறைக்குள் நுழைந்துள்ளது. நடுவானில் பல நூறு அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானம் இப்படி ஒரு அசாதாரண விபத்திற்குள் சிக்கியதால் ஒரு நிமிடம் ஷாக் ஆன விமானி ஏரியல் வெலியனேட், பின்னர் சுதாரித்துக் கொண்டு விமானத்தை லாஸ் ரியோஸ் மாகாணத்தில் பத்திரமாக தரையிறக்கியிருக்கிறார்.
காக்பிட் அறைக்குள் ரத்தம் கொட்டிய படி ராட்சத பறவை உள்ளே நிற்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றன. விமானி இந்த சம்பவத்தில் காயம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இது பயணிகள் விமானமா அல்லது ஒரு சில நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய பிரைவேட் ஜெட் விமானமா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
விமானத்தின் காக்பிட் அறைக்குள் நுழைந்த பறவை கழுகு வகையை சேர்ந்தது என்று ரஷ்யா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இதேபோன்ற ஒரு சம்பவத்தில் தனக்கு தெரிந்த ஒரு விமானியின் கண் பார்வை பறிபோய்விட்டதாகவும் இந்த விபத்தில் அப்படியான அசம்பாவிதம் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சில நெட்டிசன்கள் இவ்வளவு நெருக்கடியான தருணத்தினலும் பதற்றமோ அச்சமோ இன்றி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி உண்மையிலேயே ஒரு லெஜண்ட் தான் என்று பாராட்டி பதிவிட்டுள்ளனர். விமானத்தின் மீது மோதிய இந்த ராட்சத பறவை ஆண்டியன் காண்டோர் எனப்படும் ஒரு வகை கழுகு எனவும் 9 அடி வரை அதன் இறக்கைகள் இருக்கும் எனவும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications