என்னை ஆள விடுங்கப்பா.. எந்த கம்பெனிக்கும் சி.இ.ஓவாக இருக்க விரும்பல.. எலான் மஸ்குக்கு என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், தான் எந்த நிறுவனத்திற்கும் சிஇஓவாக இருக்க விரும்பவில்லை என்று நீதிமன்ற விசாரணையின் போது கூறியிருப்பது பல்வேறு தரப்பிலும் கவனம் பெற்றுள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே இவரைப்பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு மிகவும் பரபரப்பு அடைந்து வருகிறார்.

அதற்கு காரணம் ட்விட்டரை வாங்க கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும் பிறகு பின்வாங்கிவிட்டு பின்னர் நீதிமன்றம் வரை வழக்கு சென்ற பிறகு 44 பில்லியன் டாலருக்கு வாங்கியது தான்.

 டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்

ட்விட்டரை வாங்கியதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார். உலகின் பெரும் மதிப்பு கொண்ட கார் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி இ ஓவாக இருக்கும் எலான் மஸ்க், தற்போது தனது முழு கவனத்தையும் ட்விட்டர் மீதுதான் செலுத்தி வருகிறார். வாரத்திற்கு 120 மணி நேரம் உழைப்பதாக கூறியிருக்கும் எலான் மஸ்க், தூங்குவதற்கு மட்டுமே தனது ஓய்வு என்று வெளிப்படையாக கூறி இருந்தார்.

முன்பை விட வலுவானதாக

முன்பை விட வலுவானதாக

அதுவும் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை பெருக்க எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய புளு டிக் கட்டண சேவையால் போலி கணக்குகள் கிடு கிடுவென உயர்ந்தன. இதனால் தடாலடியாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க், மீண்டும் வரும் 29 ஆம் தேதி முதல் புளு டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கும் என்று கூறியிருக்கிறார். முன்பை விட வலுவானதாக கொண்டு வரப்போவதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

 விதிகளுக்கு புறம்பானது

விதிகளுக்கு புறம்பானது

இப்படி தினமும் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி எலான் மஸ்க்கும் அவரது ட்விட்டர் நிறுவனமும் சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் 56 பில்லியன் டாலர் இழப்பீடாக பெற்றதற்கு பங்குதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எலான் மஸ்க் தனது முழு பங்களிப்பையும் டெஸ்லா நிறுவனத்தில் செலுத்தவில்லை என்றும் இதனால், எலான் மஸ்க் இவ்வளவு தொகையை இழப்பீடாக பெறுவது விதிகளுக்கு புறம்பானது என்று டெஸ்லா பங்குதாரர் ரிச்சர்ட் டோர்னெட்டா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

சி இ ஓவாக இருக்க விரும்பவில்லை

சி இ ஓவாக இருக்க விரும்பவில்லை

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது எலான் மஸ்க் தரப்பில் , எந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆக இருக்க தான் விரும்பவில்லை என்று கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக எலான் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் கூறுகையில் "எந்த நிறுவனத்திற்கும் சி இ ஓவாக இருக்க நான் உண்மையாகவே விரும்பவில்லை.

ட்விட்டரை நடத்துவதற்கு புதிய தலைவர்

ட்விட்டரை நடத்துவதற்கு புதிய தலைவர்

ட்விட்டரிலும் எனது பங்களிப்பை குறைக்க வேண்டும் என்று எதிபார்த்துக் கொண்டிருப்பதாகவும் ட்விட்டரில் தற்காலிக ஏற்பாடுதான் செய்யப்பட்டு இருக்கிறது. ட்விட்டரை நடத்துவதற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார். நடப்பு வாரத்தில் அமைப்பு ரீதியாக முழுமையான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று நம்புவதாகவும்" தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எங்கு நெருக்கடி நிலவுகிறதோ..

எங்கு நெருக்கடி நிலவுகிறதோ..

டெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் போர்டு உறுப்பினர் ஜேம்ஸ் முரோடோக் இது தொடர்பாக கூறும் போது, "எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் சி இ ஓ பொறுப்பில் இருந்து விலக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பதால் முதலீட்டாளர்கள் தங்கள் அச்சத்தை எழுப்பியிருந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு பதிலளித்த எலான் மஸ்க், எங்கு நெருக்கடி நிலவுகிறதோ..அங்கு மட்டும் அதிக நேரம் செலவிடுவதாக கூறியிருந்தார்.

ட்விட்டரில் முழுநேரம்

ட்விட்டரில் முழுநேரம்

முன்னதாக இந்த வார துவக்கத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட் பதிவில், சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் தனது முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் நிறுவனத்தின் பிரச்சினைகளை சரி செய்யும் வரை இது தொடரும் என்று கூறியிருந்து நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+