வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 10 நொடிகள்,சடசடவென சரிந்த 12 மாடி கட்டிடம்.. அதிபர் உறவினர் மாயம்..என்ன நடந்தது? வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 மாடி குடியிருப்பின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணமாக பிளோரிடாவில் அமைந்துள்ள கடற்கரை நகரம் மியாமி. கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள் அதிகமாகக் குடியேறும் நகரங்களில் ஒன்றாக மியாமி உள்ளது.

அங்கு மக்களைக் கவரும் வகையில் கடற்கரையை ஒட்டியே பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. கடலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டின

கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்

மியாமி கட்டிட விபத்து

மியாமி கட்டிட விபத்து

இந்நிலையில், மியாமி நகரில் அமைந்துள்ள சர்ப்சைடு பகுதியில் உள்ள 12 மாடி குடியிருப்பின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தற்போதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோர்கள் மாயமாகியுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வைரல் வீடியோ

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது. முதலில் அந்த 12 மாடி குடியிருப்பின் ஒரு பகுதி வெறும் ஐந்து நொடிகளில் மளமளவென இடிந்து விழுகிறது. அதன் பின்னர், சில நொடிகளிலேயே அந்தக் குடியிருப்பின் மற்றொரு பகுதியும் இடிந்து விழுகிறது. இந்த வீடியோக்கள் ட்விட்டரில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

பராகுவே அதிபரின் உறவினர்கள் மாயம்

பராகுவே அதிபரின் உறவினர்கள் மாயம்

மேலும், பராகுவே நாட்டின் அதிபர் மரியோ அப்டோ பெனடெஸின் மனைவியின் உறவினர்கள் சிலரும் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இந்த விபத்தில் மாயமாகியுள்ளதாக பராகுவேய அதிகாரிகள் தெரிவித்தனர். பராகுவே அதிபரின் மனைவி சில்வானா லோபஸ் மொரேராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் இந்த விபத்தில் மாயமாகியுள்ளனர். அவர்களின் மூன்று குழந்தைகளும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகள்

இந்த விபத்து அமெரிக்காவையே உலுக்கியுள்ளது. கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் புளோரிடா மாகாண மேயர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த பழமையான கட்டிடத்தில் குறைவான நபர்களே வசித்து வந்ததால் மிகப் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

அந்தப் பகுதியில் இருக்கும் பழமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. கடந்த 1981ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தக் கட்டிடத்தைச் சுற்றி நடைபெற்ற கட்டுமான பணிகளால் இதன் அஸ்திவாரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதன் மூலம் விபத்து நடந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Videos of Miami building collapse went viral on Twitter. More than 100 went missing in US building collapse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X