உலகத்தையே புரட்டி போடப்போகும் புதிய டெக்னாலஜி..பாஸ்போர்டில் புதுமை படைத்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் பாஸ்போர்ட்டுக்கு பதில் முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் அந்த ஆப், மூலம் எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது. ஐரோப்பாவிலும் இது அமலக்கு வந்துள்ளது. விரைவில் இங்கிலாந்தில் வரப்போகிறது.
உலகமே ஒரு செல்போனுக்குள் அடங்கிவிட்ட பிறகு, செயல்பாடுகள் எல்லாமே ஒரு ஆப்பிற்குள் அடங்கி வருகிறது. உலகின் எந்த நாட்டில் உள்ள விஷயங்களையும் நொடியில் அறிய முடிகிறது. உலகத்தை ஒரு செங்கலில் பாதிக்கூட இல்லாத செல்போனிற்குள் அடைத்துவிட்டது தொழில்நுட்பம்..

உங்கள் முகத்தை மட்டும் காட்டினால் போதும், நீங்கள் யார், உங்கள் மெயில் ஐடி என்ன, நீங்கள் எங்கெல்லாம் போனீர்கள், உங்கள் பணப்பரிவர்த்தனைகள் என்ன, உங்களுக்கு உள்ள சொத்துக்கள் எவ்வளவு, எவ்வளவு கடன் வாங்கினீர்கள், உங்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் என்ன, சுற்றுலா போன இடங்கள் என்ன, உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்கவே பிடிக்காது, நீங்கள் கடைசியாக சாப்பிட்ட பிரியாணி என்ன என்பது வரை உலகத்தால் அறிய முடியும். இதேபோல் உலகத்தில் உள்ள யாரை பற்றி வேண்டுமானாலும் வரும் காலத்தில் மேற்கண்ட விஷயங்களை அரசுகளால் அறிய முடியும். அந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வரும் ஆண்டுகளில் பாஸ்போர்ட், விசா என எதுவுமே தேவைப்படாது என்கிற நிலை உருவாக போகிறது. ஒருவரின் முகத்தை வைத்தே , அவரது ஜாதகத்தை அறியும் வசதியை கண்டுபிடித்துள்ள அமெரிக்கா, அவரது பாஸ்போர்ட், விசா என்ன, அவர் யார், என எல்லா விவரத்தையும் ஒரு ஆப்பில் காட்டி விடுகிறது. விமான நிலையங்களில் செக் இன், செக் அவுட் செய்யும் சுங்க அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் விசாவை வாங்கி சோதிக்க வேண்டிய அவசியமே அமெரிக்காவில் இல்லை.. அவர் நேராக போய் முகத்தை ஸ்கேன் செய்யும் பெரிய ஸ்கேன் இயந்திரம் முன்பு நின்றால் போதும், அது அப்படியே யார் அவர் என்ற விவரத்தை பார்க்கிறது. பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கிறது.. பல்வேறு வகையில் அவரது புகைப்படத்தை ஆய்வு செய்வதுடன், அப்படியே டிக் போட்டு அனுப்பிவிடுகிறது.
100 ஆண்டுகளில் பாஸ்போட் விசா என்பதே இருக்காது போலிருக்கு. pic.twitter.com/42YnJ6nZt3
— Senthazal Ravi (@senthazalravi) August 28, 2024
இதற்காக Biometric Facial Comparison Technology என்ற தொழில் நுட்பத்தை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு சோதனைகளை பலப்படுத்திய அமெரிக்கா, இப்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டதால் முகத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் போலி பாஸ்போர்ட் மூலம் வரவே முடியாது.
அமெரிக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை 53 விமான நிலையங்களில் அறிமுகம் செய்துள்ளது. கப்பல்கள் வந்து செல்லும் 39 இடங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. சமீப காலம் வரை,540 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு இந்த பயோமெட்ரிக் முக ஒப்பீட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இதேபோல் இந்த ஆப் மூலம் போலி பாஸ்போர்ட்டில வந்த 2,000 க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளது.
இந்த திட்டம் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் இங்கிலாந்திலும் கொண்டுவரப்பட உள்ளது. எனவே இந்தியா உள்பட எல்லா நாடுகளிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பாஸ்போர்ட் விசா என எதையும் கையில் எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. டிஜிட்டலிலேயே எல்லாமே வந்துவிடும்.












Click it and Unblock the Notifications