“சொந்த மக்கள் மீதே குண்டு வீச்சு!” ஐநா கூட்டத்தில்.. பாகிஸ்தானை ரவுண்டு கட்டிய இந்தியா
வாஷிங்டன்: பாகிஸ்தானில் சமீப காலங்களாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தங்களது சொந்த மக்களையே பாகிஸ்தான் கொல்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானை இந்தியா சரமாரியாக சாடியுள்ளது.
நேற்று ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்தில், பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்திய தூதர் தியாகி கடுமையாக கண்டித்துள்ளார். கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் தங்கள் சொந்த மக்கள் மீது குண்டு வீசியதை சுட்டிக்காட்டிய தியாகி, இந்த சர்வதேச மேடையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக சாடியுள்ளார்.
தியாகி பேசியதாவது, "எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளை விட்டு வெளியேறி, அவசர சிகிச்சையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுங்கள். ராணுவ ஆதிக்கத்தால் நசுக்கப்படும் அரசியலமைப்பை சீரமைக்கவும், மனித உரிமை மீறல்களால் கறைபடிந்த உங்கள் நிலையையும் சரி செய்ய வேண்டும். ஒருவேளை பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதிலிருந்தும், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதிலிருந்தும், சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதில் இருந்தும் ஓய்வு கிடைத்தால் இதைச் செய்யலாம்," என்று தியாகி விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படை, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், தங்கள் சொந்த மக்கள் மீது குண்டு வீசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தியாவின் இந்த கண்டனம் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் விமானப்படை சீன தயாரிப்பான ஜே-17 போர் விமானங்களை பயன்படுத்தி, எட்டு சீன தயாரிப்பு எல்எஸ்-6 வெடிகுண்டுகளை அதிகாலை 2 மணியளவில், மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது கிராமத்தில் வீசியது.
இந்த சம்பவம், ஏற்கனவே சமீப காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களால் பதற்றத்தில் இருந்த உள்ளூர் சமூகங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. கடந்த வாரம், மாகாணத்தின் சுவாட் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா நகரில், ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி, அமைதியை விரைவாக மீட்டெடுக்க அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications